பக்கம்:பச்சைக்கனவு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 O லா. ச. ராமாமிருதம்

அலறி அலறித் தொண்டை கம்மிப்போய்க் குரல் உள்ளுக்கு இழுத்துக்கொண்டது. மூர்ச்சையானாள்.

நினைவு கூடுகையில் சுற்றி இருட்டியிருந்தது. யாரோ அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு குழந்தைக்குப் புகட்டுவது போல் வாயுள் ஏதோ ஆகாரத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். அந்த உப்பும் புளிப்பும் நாக்கைப் பிடிக்கையில், அந்த இதமான குளுமை திரிபோல் வயிற்றுள் இறங்குகையில் அது உயிர் கொடுக்கும் மோர் என்று உணர்ந்தாள். கண்ணை மலர்த்திப் பார்க்கையில் தன்னைத் தாங்கிக்கொண்டிருப்பவர் தன் கணவர் என்று கண்டாள். உடனே பழைய நெருப்புத் துடித்துப் பற்றிக் கொண்டு குதித்து எழுந்தது.

"ஜம்பூ ஜம்பூ நம்ப ஜம்பூ?’’

அவர் உடல் வெடவெடவென உதறிற்று. அவள் பிடரியில் இரண்டு துளிகள் விழுந்தன. முழுகிப் போய்க் கொண்டிருப்பவள் பிடியில் அவரைக் கட்டிக்கொண்டாள்.

இனிமேல் ஜம்பூ இல்லை. அன்றைக்குத் தலைவாரிப் புதுச் சொக்காயும் ட்ராயரும் போட்டுக் குழந்தை ஆசைப்பட்டானே என்று கண்ணுக்கு மையிட்டுக் கையைப் பிடிச்சுண்டு எல்லோரோடும் உற்சவத்துக்குக் கிளம்பி னோமே, அன்றோடு ஜம்பு சரி. இனிமேல் ஜம்பு இல்லை.

இல்லை. அப்படிச் சொல்வதும் தப்பு ஜம்பு இருந்து கொண்டே இல்லை. இல்லாமலே இருந்துகொண்டிருக் கிறான். நிஜமாகவே குழந்தை எங்கேயாவது வளர்ந்து கொண்டிருக்கானோ, இல்லாவிட்டால்- இல்லா விட்டால்?

நெஞ்சு நினைத்தாலும் அ ந் த நினைப்பின்

வார்த்தைகள் நாக்கு நுனியில் உருவாகித் தங்குகிறபோது, இதோ வாய்க்குள்ளேயே நாக்குக் கூசித் துடிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/203&oldid=590861" இலிருந்து மீள்விக்கப்பட்டது