பக்கம்:பச்சைக்கனவு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 195

வயிற்றிலே ஜ்வாலை கொழுந்து விட்டுக்கொண்டு கிளம்பு கிறது. -

இருந்தால் என்ன? நட்டதெல்லாம் பயிராகிவிடறதா? எல்லாத் தாயாருமே தாம் பெற்ற குழந்தை கைக் கொள்ளியை வாங்கிக் கொள்கிறார்களா? அதைவிட அக்கிரமங்கூட இருக்கு. இதோ கிராமத்திலே சீதா மாமி இருந்தாள். ஒரே பிள்ளை. தூரதேசத்திலே பிள்ளைக்கு உத்தியோகமென்று அவனோடே போய் மூணாவது மாசம் ஒண்டியாக வெறுங்கையை வீசிக் கொண்டு வந்து விட்டாள். பிள்ளை செத்துத்தான் போய்விட்டான் என்றாலும் வேறே ஆண் பிள்ளைத் துணையில்லாமல் தானே மயானம் போய், தான் பெற்ற பிள்ளைக்குத் தானே தன் கையாலேயே கொள்ளியிடும்படி ஆகிவிட்டது. கொள்ளியென்ன கொள்ளி, பெற்ற வயிற்றுச் சதையை ஒரு கொத்துப் பிடுங்கிப் போட்டாலும் பற்றிக் கொள்ளும்.

ஆனால் அந்த மாதிரி சோகங்களிலிருந்து மீட்சியிருக் கிறதோ இல்லையோ, அவற்றிற்கு ஒரு தீர்மானம் உண்டு, போனவன் இனிமேல் திரும்பி வரமாட்டானென்று. இது மாதிரி என் ஜம்பு இருக்கிறானோ- இல்லையோ? இருக்கிறானோ? வருவானோ- மாட்டானோ? என்று வேகாமலே வெந்து கொண்டு சாகாமலே செத்துக் கொண்டு இருக்கிற கோரம் கிடையாது மரத்திலே பாய்ந்த கோடாலியை எடுக்காமலே மரம் மேலே வளர்ந்து மூடிவிட்ட மாதிரி, இதைக் கடைசியில் தன்னையும் சிதையில் அடுக்கும்வரைத் தாங்கித் தகித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

செத்துப்போய் யமதர்மராஜன் உயிரை இழுத்துக் கொண்டு போகிறபோது, அவனை எப்படியும் ஒரு வரம் மறக்காமல் கேட்கணும்: "அப்பா, பெரிய மனசு பண்ணி என்னை ஒரு நிமிஷம் அம்பாள் சந்நிதானத்துக்கு அழைச் சுண்டு போ' என்று. அப்படி அவன் தன்னைக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/204&oldid=590862" இலிருந்து மீள்விக்கப்பட்டது