பக்கம்:பச்சைக்கனவு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 197

மனசுக்குள்ளே ஏதோ நிழல் தட்டி மறையும். அப்போது என்னவென்று புரியாவிட்டாலும் இந்த நிமிஷத்திலே தோன்றுகிறது ஜம்பு என்கிற எண்ணத்தின் இறக்கை தானோ அது?

எப்படி இருந்தால் என்ன? பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு விட்டாலும், அவள் கொடுத்தாள், அவள் எடுத்துக் கொள்கிறாள். புருஷனையாவது இதுவரையில் தன்னோடு விட்டு வைத்திருக்கிறாளே, அதற்காவது அவளைத் தினம் வணங்கியாக வேண்டாமா? தினம் அகண்டத்தில் நெய்த்திரி போடவேண்டாமா?

கஷ்டத்தைப் பெண்கள் ஒரு தினுசாய் அனுபவிக் கிறார்களென்றால், புருஷர்கள் அதைத் தாங்குகிறது இன்னொரு தினுசாய் இருக்கிறது. பெண்களை மனக் கஷ்டம் வெளிப்படையாய் எரித்தால், புருஷர்களை அது ஸ்புடம் போட்டுத் தின்கிறது. அன்றையிலிருந்தே அவர் உள்ளுற ஒடிந்துவிட்டாரென்று சொல்லலாம். நாள் ஆக ஆக, அவர் உடம்பு தேயத் தேயத்தான் அந்த உள் ஒடிப்புத் தெரிகிறது. இத்தனைக்கும் அவர் அந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது.கூட இல்லை. ஆனால் அதுதான் அவரைக் கவ்விக்கொண்டிருந்தது. அவர் உடம்பின் கோளாறே அதனால்தான்; அதுவேதான்.

தம் ஆண்மையை எந்தத் கஷ்டத்திற்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது. தாம் எதையுமே சட்டை செய்யக் கூடாது என்கிற வீறாப்புத்தான் இருந்ததே தவிர, தாங்கு வதற்கு வேண்டிய பலம் இல்லை.

அதனால் அவருடைய சிறு சிறு கோபங்களும் சீண்டல் களும் பல சமயங்களில் பொறுக்க முடியாதனவாகவே இருக்கும். ஆனாலும் வெயிலோ குளிரோ, மழையோ இடியோ சேர்ந்து இருந்து இருவரும் இவ்வளவு தூரம் கூடவே வந்துவிட்டோம். கலி முற்ற முற்ற ஆயுசு நிலவரங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்தால் இதையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/206&oldid=590864" இலிருந்து மீள்விக்கப்பட்டது