பக்கம்:பச்சைக்கனவு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 199

சோறு வைத்திருக்கும், நான் எடுத்துப் போட்டுக்கொண்டு தின்ன' என்பார்.

"அது மாதிரி இவரைத் தவிக்க விட்டு விட்டு நான் மாத்திரம் மறைஞ்சுட்டால் இவரைக் கவனிக்கிற பொறுப்பு யாருடையது? பல் தேய்க்க வெந்நீர் எடுத்து வைக்கறதிலிருந்து ராத்திரி படுக்கிறதற்கு முன்னாலே மாத்திரையைக் கையிலே கொடுக்கிறவரை நானேதானே கவனிக்கிறேன்? மன்னன் இந்தத் துரும்பை எடுத்து அந்தப் பக்கம் வைக்க மாட்டாரே! சில சமயங்களில் குழந்தைக்குப் போடுகிறதுபோல், சாதத்தைப் பிசைந்து கையில் கூடப் போட்டிருக்கேனே!

இதிலேயிருந்து ஒண்னு தெரியறது. மஞ்சள், குங்குமம், சரடு, பிறத்தியார் அபிப்ராயங்கள், சுகம், துக்கம், பிள்ளைப்பாசம், புருஷன் பெண்டாட்டி உறவு இந்த எல்லாத்தையும் மீறி விசுவாசமென்று ஒண்ணு இருக்கிறது. எல்லாரும் சத்தியம்னு கொண்டாடறாளே, அதுதானோ அது?

ஆனால் அது எதுவாயிருந்தால் என்ன? இனி நடக்கப் போகிறதை யார் கண்டது? யார் கையிலே இருக்கிறது?

'அடே பஞ்சாமி, உன் அம்மாவைக் கையைப் பிடித்து இழுத்து வாடா! அவளே செவிடாகி விட்டாள். வயசாகி விட்டதோன்னா?” என்று அவள் கணவர் உள்ளே கர்ஜிப்பது கேட்டது.

பெருமூச்செறிந்தபடி சாவித்ரி உள்ளே சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/208&oldid=590866" இலிருந்து மீள்விக்கப்பட்டது