பக்கம்:பச்சைக்கனவு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 C லா. ச. ராமாமிருதம்

சோறு தொண்டையில் விக்கியது. உலகம் ஏன் இவ்வளவு சோபையற்றுவிட்டது? அல்லது எனக்குத்தான் இறக்கை ஒடிந்து விட்டதா?

'என்னடா, நீயா கலியாணமே வேண்டாமென்ற பிள்ளை?' என்று அம்மா கேலி பண்ண ஆரம்பித்து விட்டாள்.

'அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மா! வெய்யி லல்லவா!' என்று மீசையை முறுக்கிக்கொண்டு சிரித் தாலும், என் சிரிப்பு என்னையே ஏளனம் பண்ணிற்று. இருப்புக் கொள்ளாது நடந்துகொண்டே சென்றேன் கால் இழுத்துக்கொண்டு போன படி. எதிரே ஒரு பிணம் வந்தது. பிராமணப் பிணம். கொட்டுப்பாறை, பூப்பல்லக்கு ஒன்றுமில்லாது, சுட்டுப் பொசுக்குவதற்காக அவசர அவசரமாய் எடுத்துக்கொண்டு ஒடுகிறார்கள். முறுக்கான வாலிபம். வயது இருபது இருபத்தி ஐந்துதானிருக்கும். ரொம்ப கிடக்கவில்லை. முகம் சுண்டவில்லை. தூங்குகிறாற்போல் இருந்தது. எந்த நிமிஷம் எங்கே யென்று சாவு காத்திருக்கையிலேயே, வாழ்க்கையில் செளகரியமாயிருக்க முடிந்தும், ஒருவரையொருவர் பரீவுை பார்த்துக்கொண்டு, விரல் வழி வழிய விட்ட தேன்போல், வாழ்நாளை நழுவ விடுகிறோம்.

என்னால் பிரிந்திருக்க முடியாது. அவளை எப்படி யாவது திருப்பி வரவழைத்துக் கொள்ள வேண்டும், என் தோல்வியை ஒப்புக்கொள்ளாது. சட்டென ஒரு யோசனை தோன்றிற்று. அசட்டு யுக்தியோ சமத்து யுக்தியோ, அப்பொழுது என்ன தெரிகிறது. நேரே தபாலாபீஸுக்குச் சென்று ஒரு தந்தியடித்தேன்.

'கடுஞ்சுரம். அபாயம். புறப்பட்டு வரவும்.' நாளைக் காலை போய்ச் சேரும். அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வருவாள். பார்த்துப் பரிகசிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/39&oldid=590697" இலிருந்து மீள்விக்கப்பட்டது