பக்கம்:பச்சைக்கனவு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 31

அப்படியே ரொம்பவும் கோபித்துக் கொண்டாலும் ஏதேனும் சமாதானம் .ெ சா ல் லி க் கொள்ளலாம், எப்படியோ வந்துவிடுவாள்.

இரவு இத்தனை நாளாக இல்லாத நிம்மதியுடன் துரங்கினேன்.

நடு இரவில் கதவை யாரோ உடைத்தார்கள்.

'தந்தி லார்!’ தந்தி வயிறு பகீர். தந்தி அனுப்புவதைப் போலல்ல, வந்த தந்தியை வாங்கியுடைத்துப் படிப்பது,

'பாம்பு கடித்து விட்டது. புறப்படவும்,' 'அம்மா! அம்மா சுவாமி பிறையண்டை போய் கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள். இன்னும் அரைமணி நேரத்தில் வண்டி.

புலி புலி விளையாடப்போய் புலிய புலியே வந்தாச்சு.

நாங்கள் போய்ச் சேரும்வரை இருப்பாளா? அவளைத் தான் காண்போமா, அவள் உடலைக் காண்போமா?

வண்டியில் போகையில் கண்முன், மாலை கண்ட பிராமணப் பிணக்கோலம் மறு படி சென்றது. இவ்வேளைக்கு அது சிதையில் எரிந்து சாம்பலாகிப் போயிருக்கும். -

அடமடயா, வாழ்க்கையோடு என்ன பரிசுை? எந்த நிமிஷத்தில் எங்கேயென்று சாவு காத்துக்கொண்டிருக் கிறது. விதி, வினையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நீ அவளை அவள் வீட்டிற்கு அனுப்பாமலிருந்தால், பாம்பு கடித்திருக்குமா?

ஏன் எங்கள் செயல்களெல்லாம் அர்த்தமற்று இருக்கின்றன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/40&oldid=590698" இலிருந்து மீள்விக்கப்பட்டது