பக்கம்:பச்சைக்கனவு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 0 லா. ச. ராமாமிருதம்

வண்டியை விட்டிறங்கினோம். அவள் வீட்டிலிருந்து, யாராவது வந்திருந்தாலும் வந்திருக்கலாம். குனிந்த தலை நிமிர மறுத்தது.

என்மேல் ஒரு பிடி விழுந்தது. அவளேதான். என்னை இறுகக் கட்டிக்கொண்டு கதறினாள். எங்களைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டது கூட எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இங்கில்லை.

மாமனார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 'என்னய்யா சுத்த மடையன் மாதிரி வேலை செய்திருக் கிறீர்? என் குழந்தை தவித்த தவிப்பு எனக்கல்லோ தெரியும்!”

'இதென்னா இது? எனக்கு ஒன்றுமே புரியல்லியே!” என்றாள் அம்மா. பாவம்! அவளுக்கு கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.

'என்னவா?- இதோ பாரும் உங்கள் பிள்ளை சமர்த்தை' என்று தந்தியை அம்மா முகத்தெதிரே ஆட்டினார். 'இரவெல்லாம் அழுது அழுது என் குழந்தை. முகமெல்லாம் வீங்கிவிட்டது. அவள் பட்ட அவஸ்தையைப் பார்த்தால் ஏரோப்ளேன் இருந்தால்கூடப் புறப்பட்டு விடலாம் போல உடம்பு பரபரத்தது. இருந்தும் காலையில் தான் வண்டி. உங்கள் பிள்ளை கல் மாதிரி உடம்பை வைத்துக்கொண்டு ஸ்வாசமிழுத்துக் கொண்டிருக்கிற தென்று தந்தி அடித்தால் நன்றாயிருக்கிறதா? இவர் என்ன சின்னக் குழந்தையா?” -

"சரிதானப்பா ரொம்ப ரொம்பகுதிக்கிறேளே? எனக்கு மாத்திரம் பாம்பு கடித்ததா? தந்தி நீங்கள்தானே அடித்தீர்கள் மறந்துபோச்சா?” மாமனார் பின்னடைந்தார். 'எல்லாம் நீ படுத்தின பாடுதானே!" அம்மா முகத்தில் அருவருப்புத் தட்டிற்று, "என்னடா அம்பி இந்தக் காலமே இப்படித்தானாடா: என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/41&oldid=590699" இலிருந்து மீள்விக்கப்பட்டது