பக்கம்:பச்சைக்கனவு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 0 லா. ச. ராமாமிருதம்

அடைந்து கிடந்தோம்- கூட்டிலடைத்ததுபோல், மாடிக் கும் கீழுக்குமாய் அலைந்து வெதும்பினோம்.

பதினைந்தாம் நாளிரவு ஏதோ விளக்கண்டை உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தோம். ஜன்னலும், கதவுகளும் படார் படார் என்று மோதிக் கொண்டன. புயல், மரங்களினூடே பாய்ந்து ஊளையிட்டது.

புத்தகத்தை அலுப்புடன் 'டப்' என்று மூடிவிட்டு, 'வெளியே போவோமா?’ என்றாள்.

"எங்கே போகிறது? சினிமா கினிமா எல்லாம் மழைக்குப் பயந்து மூடித் தொலைத்திருக்கிறானே!”

'கடற்கரைக்குப் போவோம்' என்றாள்.

போவோம்" புயலில் குடையைக் கொண்டு போகச் சாத்திய மில்லை. தூறல் முகத்தில் சாட்டை அடித்தது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் குடைக்கம்பி கனத்தில் பளபளத்துக்கொண்டு பூமிக்கும் வானத்திற்கும், ஜல்லி கட்டியது போன்றிருந்தது. தெருவில் ஜலம் பிரவாகமாய் ஒடியது. சாபம் பிடித்ததுபோல் தெரு வெறிச்சென் றிருந்தது. இந்த மழையில் எங்களைத் தவிர எவன் கிளம்புவான்? எதிர்க்காற்றில் முன் தள்ளிக்கொண்டு ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறு ஜலத்தில் இழுத்து இழுத்து நடந்து சென்றோம்.

இடையிடையே இடியில் பூமி அதிர்ந்தது. கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக் கோட்டைபோல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக்கொள்ள வேண்டுவதுபோல், துரத்திக் கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல், அவைகளின் கோஷம் காதைச் செவிடுபடுத்திற்று. ஒரு அலை அவனைக் கீழே தள்ளி விட்டது. வெறிகொண்டவன் போல் சிரித்தான். ஜலத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/43&oldid=590701" இலிருந்து மீள்விக்கப்பட்டது