பக்கம்:பச்சைக்கனவு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 O லா. ச. ராமாமிருதம்

மடித்தோம். ஆயினும் இது தவிர வேறேதுவும் எங்கள்

நினைவில் இல்லை.

எனக்குப் பேச வாயில்லையோ, அல்லது சொல்ல.

வகையில்லையோ, நான் தனியனாகி விட்டேன். அவள்

இப்படி வேண்டியில்லாத ஒரு வனப்பில் ஜ்வலிப்பதைத்

தடுக்கவோ, தணிக்கவோ, வழியில்லாது வெறுமென

பார்த்துத் தவித்துக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை வண்டி.

இரவில் அறையில் நுழைந்தேன். அவள் கண்ணாடி எதிரில் உட்கார்ந்து கொண்டு, மயிரை அழுந்தப் பளபள வெனச் சீவி வாரி முடிந்து கொண்டிருந்தாள். என் மனதில் என்னென்னவோ எழும்பிக் குழப்பிற்று. என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

'உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டுமென ரொம்ப நாளாய் எண்ணம்' என்றாள்.

  • * Grদুষ্ঠা ৫টা ? ' '

'நான் கிடந்தபோது ஏதாவது ஜ ன் னி யி ல் பிதற்றினேனா? அபஸ்வரம் பேசினேனா?'

'அபூர்வ ராகத்திற்கு அபஸ்வரம் கிடையாது" என்றேன்.

'சரி நான் அப்பொழுது இறந்திருந்திருந்தால் நன்றா யிருந்திருக்குமோ?"

'இதென்ன கேள்வி!'

'பதில் சொல்ல முடியுமா, சொல்லத் தைரிய

மில்லையா?”

"எப்படி நன்றாக இருந்திருக்கும்? அபூர்வ ராகத்தின் நிரடலான நிரவல் கட்டத்தில் ராகம் தவறில் அதைவிட அவமானம் உண்டோ?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/51&oldid=590709" இலிருந்து மீள்விக்கப்பட்டது