பக்கம்:பச்சைக்கனவு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 0 லா. ச. ராமாமிருதம்

திற்கு ஆளானாலும் சரி. இதற்காக அம்மாவிடமிருந்து கண் மறைவாய் இருக்கும்படி நேர்ந்தாலும் சரி, தெய்வத் தினிடமிருந்து ஒடும்படியிருந்தாலும் சரி. எங்கேயாயினும் இருவரும் போய்விடுவோம். இதற்காக எங்கள் சுபாவம் மீறி எப்படியிருக்க முடியும்?

அவளிடம் சொல்ல, அவளையெழுப்புவதற்காக அவள் பக்கம் கையை நீட்டினேன். அவள் இடம் வெறிச்சென் றிருந்தது. விழித்துக்கொண்டேன்.

அவளைக் காணோம். வருகிறேன்' என்று போனவள் இன்னும் திரும்பி வரவில்லை.

வரமாட்டாள் என்றும் எனக்கு உடனே தெரிந்து விட்டது.

எனக்குத் தோன்றியதே தீர்மானமாய் கடியாரத்தில் மணி அடித்தது. கூவிக்கொண்டே கீழே ஒடினேன். அம்மா விசுப்பலகையினின்று திடுக்கென்று விழித்துக்கொண்டு எழுந்தாள்.

'என்னடா ?’’

'அவளைக் காணோமே அம்மா?” "என்னடா பேத்தறே?" 'அவளைக் காணோமே அம்மா! அம்மா பரக்கப் பரக்க வாசலுக்கும் கொல்லைப்புறத்திற்கும் ஓடினாள். அவள் எங்கே அம்மா அகப்படப் போகிறாள்? ‘'என்னடா அம்பி உக்காந்துட்டே? தேடேண்டா

என்னாவது பண்ணேண்டா. ஐயோ! என் குழந்தையைக் காணோமேடா!'

எனக்கு பெரும் ஒய்ச்சல் கண்டுவிட்டது.

'பிரயோசனமில்லையம்மா, அவள் அகப்பட மாட்டாள். அவளுடைய உயிரற்ற உடலை நாம் காணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/53&oldid=590711" இலிருந்து மீள்விக்கப்பட்டது