பக்கம்:பச்சைக்கனவு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகம் விரல் O #9

மொதக்கறதெல்லாம் உள்ளே பூடும்- ஐயே, துா-' அந்த நாற்றம் அவளுக்கு இங்கே இப்போ அடித்தது. மெய்சிலிர்த்துப் பல்லிளித்தாள். மூக்குத்தண்டு சுருங்கிற்று.

அவளுக்குச் சரியாய் அவனும் இளித்துக்கொண் டிருந்தான். அவள் முகத்தில் மாறி மாறியாடும் ஒளியும் நிழல்களும் உள்ளத்தைச் சூறையாடின. ஆனால் விரல்கள் பாட்டுக்குத் தம் வேலையைச் செய்துகொண்டிருந்தன. ஒசையிலாது அவை பயிலும் வசியத்தில் சிக்கி, அவள் உரக்கச் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

'கட்டிக்கறப்போ இம்மா மோசமில்லே. ஆளு நல்லாக் கூட இருப்பான், தாட்டியா, கட்டா சிரிச்சா தேங்காயுடைச்சா மாதிரி பல்லு வெள்ளையா பளிச்சுன்னு வெளிலே வரும் பொட்டிமவன் இப்போ பன்னியாட்டம் ஊதிட்டான். மழக்கத்துலே வந்தான்னா அடி என் யெம்மாடி! எப்பாடா! மொத்து மொத்துன்னு: சாத்துவான் பாரு! நீ மட்டும் என்னாட்டம் பொம்புளையா யிருந்திச்சே, அவன் என்னை ஆடியிருக்கிற அக்ரும்பூ பூரா தொறந்து காமிப்பேன். ஹோ ஹோ!! ஹோ!!!”

சட்டென சிரிப்பு அடங்கி அவனை உற்று நோக்கினாள். 'ஒனக்கு நான் சொல்றது புரியல்லே யில்லே? ஒண்ணுஉடபுரியல்லே இல்ல? புரியாகாட்டி சேமம் என்னாங்கறே?’’ -

அவனிடமிருந்து பதில் எதும் வரவில்லை. அவன் இங்கேயே இல்லை. மைல்களுக்கப்பால், கோதாவரிக் கரையில், தன் வீட்டுத் தாழ்வாரத்தில் இருந்தான். முதுகின் பின் கைகட்டிக் காத்திருந்தான். இரவு, வானில் கோடி நக்ஷத்திரங்கள் எரிந்தன. எங்கும் வானும் வையமும் தம்மில்தாம் நிரம்பிய அமைதி, ஆனால் அவனை, நெஞ்சு விரிசல் கண்டாற்போல், காரணம் சொல்ல இயலாது சகிக்கொணாத் துக்கம் வாட்டிற்று.

உ!- 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/58&oldid=590716" இலிருந்து மீள்விக்கப்பட்டது