பக்கம்:பச்சைக்கனவு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 C லா. ச. ராமாமிருதம்

'தர்ப்பணம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இட்டிலி முன்னால் ஆகட்டும்' என்று அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

'துரங்கவிடமாட்டேங்கறாளே பாவி கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தானும் தூங்கமாட்டேன் என்கிறாள்' என்று உரக்கத் திட்டிக் கொண்டே, மதுரம் கதவைத் திறந்தாள்.

அம்முலு எதிரே நின்றாள். அவள் மனதில் பொங்கி வழியும் தீபாவளிக் கொந்தளிப்பில், மன்னியின் முகச் சுளிப்புக் கூட தெரியவில்லை.

'மன்னி! மன்னி! தீபாவளி' அம்முலு கையைக் கொட்டினாள். 'முன்னாலே உன்னைத் துரக்கி மணையில் வைக்கலாம் வா!' முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு மதுரம் வென்னிருள் அறைப்பக்கம் சென்றாள்.

'அடே வாசு! அடே மணி! சீனா கமலம்! எல்லோரும் எழுந்திருங்கோ தீபாவளி! தீபாவளி!'

'இந்தச் செவிடு பண்ணற ரகளையைப் பாரு' என்று மாடியில் படுத்திருந்த மதுரத்தின் தம்பி பாலு இரைந்தான்.

'என்னப்பா இப்படி கத்தறே! காதிலே விழப் போகிறது." - -

பாலுவின் நண்பன் பாஸ்கரன், பாலுவின் அழைப்பின் பேரில் தீபாவளிக்காக வந்திருந்தான். அவன் பெற்றோர்கள் வெளியூரில் இருந்தனர். இந்த ஒரு நாளைக்காக அவ்வளவு தூரம் எங்கே போவது?

'கவலையே படாதே. அவள் காதில் குண்டு போட்டா லும், விழாது. படுசெவிடு. ஐயையோ, இந்த வீட்டில் நாங்கள் பேசுவதெல்லாம் அம்முலுவுக்குக் காது. கேட்குமென்றிருந்தால், எங்கள் அத்தனை பேருக்கும் நாக்கு இழுத்து விடவேண்டியதுதான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/63&oldid=590721" இலிருந்து மீள்விக்கப்பட்டது