பக்கம்:பச்சைக்கனவு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்முலு 0 83

'கெளரி கலியாணம் வைபோகமே...... 3 *

'யாரப்பா அது? குரல் ஜம்மென்று இருக்கிறதே! கம்பீரமா, புருஷக் குரல் மாதிரி!'

"யாரு, எல்லாம் செவிடாம்பாள் தான்!”

'குரலில் என்ன சுத்தம்! ஆனால் அவள் பாடுவது அவளுக்கே கேட்காதல்லவா?'

'வாசுதேவ தவபாலன்- அரசகுல காலா...... 8 : அம்முலுவின் குரல் கணிரென இயற்கையான காத்திரம் படைத்து நல்ல கணகணப்புடன் எழும்பி மலையருவி போல் வீட்டை நிறைத்தது. நட்டா முட்டியாய், தாயின் வாய்வழி கேட்டு நறுக்காய் நாலு உருப்படிகள் தான் அவளுக்குத் தெரியும். அவைகளும் அவளுக்குக் காது கேட்காது.

உள்ளே, ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு தலைமேல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

பாஸ்கரனும் பாலுவும் கீழிறங்கி வருகையில், குழந்தைகளெல்லாம் நீராடிவிட்டு எண்ணெய்ப் பிசுக்கு உலருவதற்காகப் பழந்துணிகளைக் கட்டிக் கொண்டு மத்தாப்புக்களைக் கொளுத்திக் காண்பித்துக் கொண் டிருந்தன. அம்முலு கைக்குழந்தையை முழங்காலில் போட்டுக்கொண்டு, எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள். இன்னமும் சீக்காய் தேய்க்கும் கட்டம் வரவில்லையாதலால் பாப்பா தலையைத் துக்கித் துரக்கி அவளையே பார்த்து பொக்கை வாயைக் காட்டிக் கொக்கரித்தது.

மதுரம் புதுத் துணிகளை எடுத்துவர மாடிக்குச் சென்றிருந்தாள். எப்பவுமே அப்படித்தான். உடல் நலுங்காத வேலைகளைத் தனக்குப் பங்கு போட்டுக் கொள்வதில் மதுரத்துக்கு அலாதி சாமர்த்தியமுண்டு. வரப்பிரசாதி என்றுகூட சொல்லலாம். சமையல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/64&oldid=590722" இலிருந்து மீள்விக்கப்பட்டது