பக்கம்:பச்சைக்கனவு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 O லன. ச. ராமாமிருதம்

வீட்டுவேலைகளுக்கும், குழந்தைகளுக்குப் பணிவிடைக்கும் அம்முலுதான்.

அம்முலுவின் அசாதாரண அழகைக் கண்டு பாஸ்கரன் பிரமித்துப் போனான். முட்கள் நடுவே சப்பாத்திப் பூவைப்போல், இத்தனை பேர்களுக்குமிடை யில், அவள் அழகின் பூரிப்பில் ஒரு தனி ஒதுக்கம், வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கும் அவனால் அறிய முடிந்தது.

ஆம், அவளே ஒரு தனி உலகத்திலிருந்தாள்; நித்திய மெளன. உலகம். மற்றவர்கள் பேசினால், மெளனப் படங்களில் காண்பதுபோல், உதட்டின் அசைவிலும் உடல் ஆட்டத்திலும் சமிக்கையிலும் அவள் அர்த்தம் கண்டுகொள்ளணுமேயொழிய, வாய்ப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ள முடியாது.

தினசரி, குழந்தை பெரியவர்களின் கூக்குரல்களும், சிறுஞ்சண்டை பெருஞ் சண்டைகளும், நாகரிகம் முற்ற முற்ற நாளடைவில் உலகத்தை நாசத்திற்கே இழுத்துச் செல்லும் தெருச் சந்தங்களும், சொல்வதெல்லாம் காது கேட்பதால் நேரும் கவலைகளும், அவள் உலகத்தில் புகுந்து, மற்றவர்களைச் செய்வது போல், உடலையும் மனதையும் துளைத்து உருக்கி அவளை உளுக்க வைக்க வில்லை. அவளை விட நாலு வயது மதுரம் இளையவள். ஆனால் மதுரத்திற்குக் கன்னத்துச்சத்தை ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் அலங்காரம், பூச்சு எல்லாம் அமர்க்களம்தான். தான் இன்னும் புது மெருகு அழியாமல் இருப்பதாகவே எண்ணம்.

அம்முலுவின் முகத்தில் இன்னமும் பால் சொட்டிற்று. ஆயினும் கூந்தலில் மாத்திரம் இருண்ட மேகத்தில் மின்னல் போல், ஒன்றிரண்டு வெள்ளி மயிர்கள் புரண்டன. அவள் பல்வேறு பிடுங்கல்களுக்கு ஆளாகவில்லை. கணப்புச் சட்டி யில் தணல் மூடிய பொன்னுருண்டை போல் ஒரே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/65&oldid=590723" இலிருந்து மீள்விக்கப்பட்டது