பக்கம்:பச்சைக்கனவு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்முலு O 57

மஹோன்னதமான துயரத்தில் துலங்கிக் கொண் டிருந்தாள்

பாலுவையும் பாஸ்கரனையும் பார்த்துவிட்டுச் சட்டென எழுந்து, புன்னகை புரிந்த வண்ணம் குழந்தையை அலக்காய்த் தூக்கிக் கொண்டு வென்னீர் அறையுள் சென்றாள்.

'உடம்பைப்பார், சரியான நாட்டுக் கட்டை' என்றான் பாலு. பாஸ்கரனுக்குத் திடீரென்று பாலுவைக் கண்டு கரிப்பு எடுத்தது.

'என்ன முழிக்கிறாய்? நாட்டுக் கட்டையென்றால் எல்லா விதத்திலும் நாட்டுக் கட்டைதான். எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாம் கைநாட்டுதான். இந்த இடது கைப் பெருவிரல் குறி செவிடாம்பாள்- இல்லைஅம்முலு- இல்லை- அலமேலு அம்மாளுடையது.” ‘இன்று முழுவதும் பற்றுப் பாத்திரங்களைத் தேய் அல்லது கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்று' என்றால் செய்து கொண்டிருப்பாள். அதுவும் என் அக்காளுக்கு வேலை வாங்க சொல்லிக் கொடுக்கணுமா?’’

அம்முலுவுக்கு, பாலு தன்னை ஏளனம் பண்ணுவ தெல்லாம் தெரியாது. கொல்லைப் புறத்து முற்றத்தில் குழந்தையின் தலையைத் து வ ட் டி க் கொண்டே ஆகாயத்தை குழந்தைக்குச் சுட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஒரு அவுட்டு வாணம் கிளம்பி ஆகாயத் தில் சீறிக் கொண்டே சென்று பட்டென்று வெடித்தது. அதனின்று நாலைந்து வர்ணங்களில், நக்ஷத்திரக் கூட்டங்கள் உதிர்ந்து குடை கவிந்து அவிந்தன. ஆயினும் ஒரே ஒரு நீலப் பொறி மாத்திரம் அழியாது, வெகு தூரம் வாணவெளியில் தனியே மிதந்து சென்றது. அதன் கதியைக் கண்ணுக்கெட்டிய வரை கவனித்த வண்ணம், அம்முலு அதிசயித்து நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/66&oldid=590724" இலிருந்து மீள்விக்கப்பட்டது