பக்கம்:பச்சைக்கனவு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 C லா. ச. ராமாமிருதம்

அது கடைசியாய்க் கரியாய்த்தான் ஆயிற்றோ அல்லது நrத்திரங்களுடன் கலந்துவிட்டதோ? நிச்சயமாய்த் தெரியவில்லை.

அம்முலு பெருமூச்செறிந்தாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

மதுரம் புதுத் துணிகளுக்குக் குங்குமம் தடவிக் கொசுவிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அவளைச் சுற்றி ஆரவாரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தசிவம் அறையை விட்டு வெளியே வந்து நின்று கையை முறித்து முதுகைச் சொரிந்து கொண்டிருந்தான்.

'இந்தாடா வாசு, உனக்கு சொக்காய் வேஷடி: மணி, உனக்கு அரை நிஜார் சொக்காய்; சீனு, உனக்கு. சொக்காய் வேஷ்டி, கமலுவுக்குப் பாவாடை ஜாக்கெட்; எனக்குப் புடவை ரவுக்கை; பாலு, உனக்கும் உன் அத்திம்பேருக்கும் வேஷ்டி துண்டு-’’

அம்முலு எல்லாருக்கும் பங்கீடு ஆவதைப் பார்த்துக் கொண்டு வாய் பேசாது தன் பங்கிற்காகக் காத்துக்கொண் டிருந்தாள் முகத்தில் ஆவல் ததும்ப புன்சிரிப்புடன் அப்படி அவள் நின்றது, அப்பா ஆபீஸிலிருந்து வருகையில் வாங்கி வந்த பொட்டலத்தைப் பிரிக்கக் காத்துக்கொண்டிருந்த குழந்தை மாதிரியிருந்தது.

திடீரென்று இம்சையான மெளனம் அங்கு தேங்கியது.

அம்முலுவை அவர்கள் அடியோடு மறந்து விட்டார்கள். பாஸ்கரனுக்கு முகம் திகுதிகு என்று எரிந்தது. கண்ணுக்கெதிரில், இருள் துலங்கள், கட்டானிட்டாற் போல், ஒன்றன்பின் ஒன்று குறுக்கே பாய்ந்து சென்றன.

இங்கு நான் ஏன் வந்து மாட்டிக்கொண்டேன்?

இந்த வீடே காடு மாதிரி இருந்ததேயொழிய வீடாய் இல்லை. அவரவர் துணியை அவரவர் பிய்த்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/67&oldid=590725" இலிருந்து மீள்விக்கப்பட்டது