பக்கம்:பச்சைக்கனவு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்முலு O 59

நிற்பதைப் பார்த்தால் மாமிசத்துண்டை முன்னங்கால் களுக்கிடையில் பதுக்கிக்கொண்டு ஒன்றுக்கொன்று "உர்-ர்-' என்று உறுமிக்கொண்டிருக்கும் மிருகங்கள்...

அம்முலுஆனந்தசிவத்தின் முகத்தில் அசடு தட்டிற்று. போன தீபாவளிக்கு என்ன பண்ணினானோ, அல்லது இந்த தீபாவளிக்குப் பாஸ்கரனில்லாவிட்டால் என்ன சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்திருப்பானோ? இருந்தாலும் மூனாம் மனிதனுக்கெதிரில்...... மதுரத்தைப் பார்த்துக் கடுகடுவென விழித்தான். மதுரம் மென்று விழுங்கினாள்.

'எல்லாம் ஏகப்பட்ட செலவாயிடுத்து, நான் என்ன பண்றது? உள்ளே என் கலியானப் புடவை இருக்கு. வேனுமானால்...'

ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு சீறினான். 'கொண்டு வா அதை, இல்லை, இவளை அழைத்துக் கொண்டு போய்க் கொடு- என்ன ஸார், பாருங்கோ இந்த பொம்மனாட்டிகளை! நமக்கு இவர்களோடு கடைக்குப் போகப் பொழுது இல்லையே என்று காசை இவர்கள் கிட்டேவிட்டால் இப்படித்தான். தன் காரியம் தன் கணக்குத்தான்

Damin you! உங்களைப் பற்றி எனக்கு ஒண்னும் தெரிய வேண்டாம். இங்கே நான் ஏன் வந்து மாட்டிக் G)4;tr6ŵrGLGŵr? Damn you, Damn Ljrr 6y] Damn al ! of you!

பட்டுப் புடவையுடன் அம்முலு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள். சுயம்வர மண்டபத்திற்கு வந்த ராஜகுமாரி மாதிரியிருந்தாள் அவள். பின்னால் மதுரம், புதுப் புடவையைக் கட்டியும், சோபையிழந்து, தாதி மாதிரி.

அம்முலு வந்து அண்ணனை நமஸ்கரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/68&oldid=590726" இலிருந்து மீள்விக்கப்பட்டது