பக்கம்:பச்சைக்கனவு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 C லா. ச. ராமாமிருதம்

இங்கு இரண்டு நிமிஷம் இளைப்பாறிவிட்டுத்தான் செனறது. இதோ மூச்சைப் பிடித்துக்கொண்டு கிளம்பி விட்டது.

வண்டி வளைவில் திரும்பி மரங்களின்பின் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்து விட்டுப் பசுபதி திரும்பினான். அவன் முகம் கறுத்திருந்தது. நல்ல நிறமாக இருப்பவர்களுக்கு எப்பொழுதும் ஓர் அசெளகரியம். நெஞ்சில் இருப்பதை முகத்தின் நிறம் காட்டிக் கொடுத்துவிடும். பசுபதி பாபுவைவிட நிறம்.

"என்ன, போவோமா?’’ டே, பாபூ, ஒடுடா, உன்னை நான் பின்னால் வந்து பிடிக்கப் போறேன்.'

பையன் கொக்கரித்துக்கொண்டு சி ட் டா ய் ப் பறந்தான்.

அவன் செவிதுாரம் தாண்டியதும் தாrாயனி, 'உங்களுக்கு இன்று மனம் சரியில்லையல்லவா?’ என்றாள். அவன் முகம் லேசான பச்சையாய் மாறிற்று. 'உனக்கு அப்படி ஏன் தோணனும்?'

'எனக்குத் தோணவில்லை. தெரியும். இன்று தபால்காரன் வந்து போனதிலிருந்து நீங்கள் சரியா யில்லை. என்னை என்ன என்றுகூடக் கேட்கவில்லை. என்னோடு அப்புறம் சரியாய்ப் பேசக்கூட இல்லை.”

'பிறருக்கு வரும் கடிதத்தைப் பிரிப்பதோ கேட்டு வாங்கிப் படிப்பதோ எனக்குப் பழக்கம் இல்லை."

'அப்போது நான் பிறத்தியாரா?” அவன் பேசவில்லை.

அப்போது உங்களுக்கு கடிதம் வந்தாலும் நான் என்ன என்று தெரிந்துகொள்ளக் கூடாதல்லவா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/75&oldid=590733" இலிருந்து மீள்விக்கப்பட்டது