பக்கம்:பச்சைக்கனவு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 0 லா. ச. ராமாமிருதம்

கொண்டாள். அறைக்கு வெளியே நிலவு பட்டை வீசிற்று. அவள் கணவன் படுக்கை விரித்தபடி கிடந்தது. நினைவைக் சரிகூட்டிக் கொள்ளுமுன் உருகோசை புரண்டு வந்து மேலே மோதிற்று, அவளுக்குத் திக்கென்றது. பரபரவென எழுந்து வெளியே வந்தாள்.

பூந்தொட்டிகள் சூழ்ந்த கல்மேடை மேல் அவன் உட்காந்திருந்தான். மடியில் பாபு தலைவைத்துக் கவர்ச்சி யான அலங்கோலத்தில் தூங்கிக் கொண்டிருந்தான், பசுபதி ஒரு கையால் தம்பூரை இறுகத் தழுவிக் கொண்; டிருந்தான்.

அவள் அவனிடமிருந்து தம்பூரைப் பிடுங்கிக்கொள்ள முயன்றாள். வேண்டாம்...'

'இல்லை, நான் பாடவில்லை. வெறுமெனச் சுருதி மாத்திரம் மீட்டிக்கொண்டிருக்கிறேன்.'

'அதற்கும் நேரமாகவில்லையா?” அவன் வெறுமெனச் சூள் கொட்டினான். அவள் எதிரே அமர்ந்தாள். காற்று சில்லென வெட்டிற்று. உடம்பைச் சிலிர்த்து ஒடுக்கிக் கொண்டாள்.

'இது உங்களுக்கு உடம்புக்காகுமா? அவள் சொன்னது செவியில் ஏறியதோ இல்லையோ? தம்புராக் கட்டை மேல் முகத்தைப் பதித்து ஓசையை மூர்க்கமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.

எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து பொழியும் அவ்வோசை பாம்புபோல் அவள்மேல் வழிந்து கவ்விற்று. அது தன்னை விழுங்கு வதை உணர்ந்தாள். நாத வெள்ளம் கிறுகிறுவென மூக்கு விளிம்பு வரை ஏறிற்று. மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்து மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை நாளில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/79&oldid=590737" இலிருந்து மீள்விக்கப்பட்டது