பக்கம்:பச்சைக்கனவு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த கூடிாயணி () 71

சுழலில் அடித்துக்கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூலமூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில் அவை தண்ணிருள் பேசிய பேச்சுப் போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்றாய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவனாய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப்போனாள்.

‘'என்ன இது! ஏன் இப்படி இருக்கிறது?’’ "எப்படி இருக்கிறது?’’ 'நெஞ்சில் சந்தோஷம் பொங்குகிறது. ஆனால் தொண்டையைத் துக்கம் அடைக்கிறது. கடகடவெனச் சிரிக்க வாய் திறக்கிறது. ஆனால் அழுகை பீரிட்டுக் கொண்டு வருகிறது. இது என்ன? பயமாயும் இருக்கிறது: சந்தோஷமாயும் இருக்கிறது. நாமே இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகங்கூடத் தோன்றுகிறது. நாம் இப்பொழுது இல்லையென்றால் வேறு எ ப் படி இருக்கிறோம்! இருக்கிறோம் என்றால் இல்லாமலும் இருக்கிறோமே? புரியவில்லை. ஆனால் புரியவும் புரிகிறது. ஆனால் புரியவும் வேண்டாம்; என்ன இது?"

"நீயும் நானும் எங்கோ ஒர் எல்லைக்கோட்டில் இருக்கிறோம். நாம் இப்பொழுது குழந்தைகளாகி விட்டோம். குழந்தை தூக்கத்தில் சிரிக்கிறது. உடனே விக்கி விக்கி அழுகிறது. இது என்ன?”

'சுவாமி தூக்கத்தில் குழந்தைக்குத் தாமரைப் பூவைக் காட்டுவாராம்! அதைப் பார்த்ததும் அது சிரிக்குமாம். அவர் பூவை மறைத்ததும் அழுமாம்.' - "நாமும் தாமரைப் பூவைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இல்லை, பூவினுள் உட்கார்ந்து கொண் டிருக்கிறோம். குவிந்த இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பிரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/80&oldid=590738" இலிருந்து மீள்விக்கப்பட்டது