பக்கம்:பச்சைக்கனவு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூடிாயணி O 77

அவன் குரல் தம்பூரின் ஓசையோடு ரகசியமாய்க் கலந்து ஸ்ன்னமாய்ப் பிரிந்து மெதுவாய் வீங்கி எழுந்தது.

அவள் கண்ணிர் கரையுடைந்தது. அவன் பாதங்களை இரு கைகளாலும் வருடினாள். தொண்டை கேவிற்று.

'நான் இப்போது எது நினைத்தேனோ அதற்கு அடி யெடுத்துக் கொடுக்கிறீர்கள்!'

அவன் கண்கள் புன்னகை புரிந்தன. குரல் இசையோடு தழுதழுத்தது.

'ஸ்.சி.ரி...ம...மாம...மா...மா...மா......

o

தடவிக் கொடுத்தாற்போல் அசுரங்கள் ஒன்றோ டொன்று குழைந்தன. சுருதியில் ஒளிந்து விளையாடின.

  • ៣៦f pop ងិ ង្វេ f “...” அவள் கைகள் கூப்பிக் கோத்துக் குவிந்து அந்தரப் பட்சிபோல் தவித்தன. கன்னத்தில் கண்ணிர் வழிந் தோடியபடி இருந்தது. அவள் அவஸ்தையைக் கண்டு அவன் பாடுவதை நிறுத்தினான்.

'தாrாயணி, ஏன் அழுகிறாய்?" "நான் அழவில்லை. என் நெஞ்சை மீட்டுகிறீர்கள். என் நெஞ்சில் எவ்வளவு ஆழம் என்னையும் அறியாமல் பதிந்தீர்கள் என்று அன்றுவரை நான் அறியேன். நான் வளர்ந்த சூழ்நிலையில், எவ்வளவோ புருஷர்களோடு பேசிச் சிரித்துக் கொட்டமடித்திருக்கிறேன். அதற்கு என் வீட்டிலும் தடங்கல் இல்லை. காலேஜில் எத்தனை மாணவர்கள், வகுப்புக்கு எத்தனை வாத்தியார்கள்!'

"அதே மாதிரி பாட்டுக்கும் ஒரு வாத்தியார்.'

"அப்படித்தான் அப்பா நினைத்தார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் அப்படி இல்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/86&oldid=590744" இலிருந்து மீள்விக்கப்பட்டது