பக்கம்:பச்சைக்கனவு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாrாயணி C 79

தம்பாவிட்டால் போங்கள். கண்ணை விழித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சொப்பனம் மாதிரி இருக்கிறது. ஆனால் நீங்கள் என் எதிரில் இல்லை. என் மடியில் குழந்தையாய்க் கிடந்தீர்கள். வெட்கம் விட்டுச் சொல்கிறேன்.”

'உனக்கும் எனக்குமிடையில் வெட்கம் என்பது கிடையாது.'

நான் மடியில் இருந்த குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தேன். எனக்குப் பால் பீரிட்டுக்கொண்டு வந்தது. ஆனால் அந்தத் தோற்றம், தோன்றின சுருக்கில் மறைந்தது. கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்க்கையில், நீங்கள் கண்ணை மூடி உங்கள் பாட்டில் உங்களை இழந்திருந்தீர்கள். உங்கள் முகத்தில் ஒரு தினுசான களை போட்டிருந்தது. உங்கள் நெற்றியில் வேர்வை பொட்டுப் பொட்டாய் நின்றது. “உங்களை நான் தொட மாட்டேனா? என் முன்றானையால் அந்த வேர்வையை ஒற்றி எடுக்க மாட்டேனா? என்னில் மூண்டு விட்ட தாய்மை தவித்தது. அத்தருணத்தில் என்னை உங்களுக்கு இழந்தேன். கானம் கலைந்து நீங்கள் திடுக்கென விழித்துக் கொண்டீர்கள். எதிரில் என்னைப் பார்த்ததும் உங்கள் முகம் கடுகடுத்தது, ஏதோ நீங்கள் ஏமாந்த சமயம் எனக்குத் தெரிந்து விட்டது போல். தம்பூரைக் கீழே இறக்கி விட்டுக் குடிக்க ஜலம் கேட்டீர்கள். கொண்டு வந்த தீர்த்தத்தை இரண்டு முழுங்கு சீப்பிக் குடித்துவிட்டு, தம்ளரைப் படக்கெனக் கீழே வைத்துவிட்டுச் சரேலென்று எழுந்து போய்விட்டீர்கள்.”

'ஹோட்டலிலேயே சாப்பிட்டு எனக்குச் சீப்பிக் குடிக்கும் வழக்கம் விடவில்லை. என்னை மன்னித்துவிடு." "மன்னிப்பா? அவள் ஒரு விதமான ஆத்திரத்துடன்

சிரித்தாள். நான் தம்ளரை இரண்டு கைகளிலும் எடுத்து ஆத்திரத்துடன் நீங்கள் விட்டுப்போன மிச்சத்தை உறிஞ்சிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/88&oldid=590746" இலிருந்து மீள்விக்கப்பட்டது