பக்கம்:பச்சைக்கனவு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 O லா. ச. ராமாமிருதம்

இருப்பவர்கள் எல்லாம் உமக்கு ஆமாஞ்சாமி போட்டும் போட்டுப் பிறர் அபிப்பிராயம் என்று ஒன்று உண்டு என்பதையே மறந்துவிட்டீர்கள். உம்மிடத்தில் பணம் ஏராளமாய் இருக்கிறது."

'என் கையில் செக்கைத் திணித்தார். நீங்கள் என் பெண்ணுக்கு இழைத்திருக்கும் தீங்கிற்கு உம்மைச் சும்மாவே விடுகிறேன் என்று வைத்துக்கொள்ளும். '

கொஞ்சம் மூச்சு விடுங்கள். உங்கள் பெண்ணிற்கு நான் என்ன தீங்கு இழைத்துவிட்டேன்?

'இன்னும் என்ன வேண்டும்? ஜவ்வாதுப் பொட்டும் கஸ்தூரி வாசனையும் இட்டுக்கொண்டு அவள் மனத்தை மயக்கியிருக்கிறீர்.”

செக்கை நாலு சுக்கல்களாய்க் கிழித்து அவர் ஜேபியில் செருகினேன். 'தயவு செய்து போகிறீர்களா?'

மிஸ்டர் பசுபதி!' 'உடனே போய் விடுங்கள். தயவு செய்து உடனே."

அவர் போன பிறகு வெகுநேரம் நான் உட்காந்த இடத்தை விட்டு அசையவில்லை. உன்னைப்பற்றி நான் அதுவரை நினைத்ததில்லை. நான் ஒரு நாளும் அதுவரை வாசனைகள் உபயோகித்ததும் இல்லை. எங்கோ கடியாரத் தில் மணி ஒன்பது அடித்தது. கஸ்தூரி, ஜவ்வாது, கஸ்தூரி ஜவ்வாது என்று இரண்டு வார்த்தைகள், தொண்டையில் நார் சுற்றிக் கொண்டிருந்தன. இரண்டு கட்டடம் தாண்டி னால் சந்தனக் கடை. சரக்கென்று எழுந்து சென்றேன். ஜவ்வாதும் கஸ்துரியும் வாங்கிக் கொண்டு வந்தேன். கண்ணாடி பார்த்துச் செவ்வையாக இட்டுக்கொண்டேன். தம்பூரை மீட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தேன்.

'நானே என் வசத்தில் இல்லை. அந்த சமயம் எனக்கு உடல் கூட இல்லை. குரலாய் மாறிப் போயிருந்தேன். எத்தனை நேரம் பாடினேனோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/93&oldid=590751" இலிருந்து மீள்விக்கப்பட்டது