பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு 33 (1) பிரகாரம், ஒல் வொரு பஞ்சாய்த்து யூனியன் கவுன்ஸிலுக்கும் ஒரு தலைவரும் துணைத்தலைவரும் இருப்பார்கள். 14. தலைவரும் துணைத்தலைவரும் எப்படி தேர்த் தெடுக்கப்படுகிருர்கள். பிரிவு 36 (2) பிரகாரம், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விதிகள் விவரமாக இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. 15. தலைவர், துணைத்தலைவருக்குச் சம்பளம் அல்லது அலவன்ஸ் ஏதாவது உண்டா ? பிரிவு 39 பிரகாரம், தாம் வகிக்கின்ற பதவி காரண மாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, செய்யும் சேவைகளுக்கு, பஞ்சர்யத்து யூனியன் கவுன்வில் நிதி யிலிருந்து, தலைவர், துணைத்தலைவர் அல்லது அங்கத்தினர்கள் எவரும் சம்பளமோ அலவன்ஸோ பெறக் கூடாது. 16. பஞ்சாயத்து யூனியன் தலைவர், அங்கத்தினர் களுக்கு பிரயாணப் படி அல்லது வேறுபடிகள் கொடுக்கப்படுமா? அங்கத்தினர்கள் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அலுவல் காரணமாக பிரயாணம் சென்ருல், அரசாங்கம் நிர்ணயித்துள்ள பிரயாணப் படியை, பஞ்சாயத்து யூனியன் நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். விவரம் தனியாக உள்ளது. - பஞ்சாயத்து யூனியன் கவுன்வில் தலைவர், அந்த வட்டா ரத்துக்குள் பிரயாணம் செய்வதற்கு, மாதம் 100 ரூபாய்க்கு அதிகம் போகாமல், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிதி யிலிருந்து, பிரயாணப் படி பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிகளின்படி அனுமதி வழங்கியுள்ளது. 17. பஞ்சாயத்து யூனியன் கவுன்வில் என்னென்ன கமிட்டிகள் அமைக்கலாம் ? கமிட்டி என்பது ஆங்கிலச் சொல் , தமிழில் அதை குழு : என்று சொல்லுகிரு.ர்கள்.!