72
20. கமிட்டிகள் எவ்வாறு அலுவல் புரிகின்றன ! அவற்றிற்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன ?
பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் எல்லா உத்ಣಡಿಚ್ಚ7ಕ್ಫ களுக்கும், அதாவது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிதியிலிருந்து சம்பளம் கொடுத்து பற்றெழுதக்கூடிய உத்தி யோகங்களுக்கு, நபர்களை நிய்மிப்பதற்கு நியமனக் கமிட்டி பின் முன் அங்கீகாரம் பெற்றே செய்ய வேண்டும்.
கமிட்டிகள் சம்பந்தமாக, அரசாங்கம் பிறப்பிக்கும் விதிகளுக்கு உட்பட்டு, மற்ற கமிட்டிகளுடைய கடமைகளையும் அதிகாரங்களையும் அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்வதற்கு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு அதிகாரம் உண்டு.
21. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எப்படிக் கொண்டு வருவது ?
பஞ்சாயத்துச் சட்டம் 153-வது பிரிவுக்கு உட்பட்டு, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணைத் தலைவர்மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரலாம்.
பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர் பாதிப் பேருக்கு குறையாமல் உத்தேச பிரேரணையில் கையொப்ப மிட்டிருக்க வேண்டும். தாங்கள் கொண்டு வரப்போகும் பிரேரணையின் நகல், தலைவர் அல்லது துணைத்தலைவர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை பிரேரணையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் யாரேனும் இரண்டு அங்கத் தினர்கள் ரெவின்யூ டிவிஷனல் அதிகாரியிடம் நேரில் சென்று கொடுக்க வேண்டும்,
அதன்பின், குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றின் நகலை ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி, சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணைத்தலைவருக்கு அனுப்பி, அது கிடைத்த ஒரு வாரத்திற்குள் தங்களுடைய வாக்கு மூலத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.