73
பிறகு, பிரேரணையைப்பற்றி ஆலோசிக்க ரெவின்யூ டிவி ஷன் அதிகாரி, ஒரு தேதி குறிப்பிட்டு, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் காரியாலயத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். 々
பிரேரணை மீது எவ்வித விவாதமும் கூடாது.
பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் மொத்த அங்கத் தினர்களில், மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாதவர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் : அரசாங்கம், அடிஷனல் டெவலப்ம்ென்ட் கமிஷ்னர் ரெவின்யூ, டிவிஷனல் அதிகாரி மூலமாக, ஒரு அறிவிப்புச் செய்து தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்.
மேற் சொல்லப்பட்ட மெஜாரிட்டி ஆதரவுடன் பிரேரணை நிறைவேருவிட்டாலும், கேர்ரம் இல்லாததால் கூட்டம் நடைபெருமல் போனலும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்வில் த்ல்ைவர் அல்லது துணைத் தலைவர்மீது, அந்தத் தேதியிலிருந்து அடுத்த ஆறு மாதகாலத்திற்குள் நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வர முடியாது.
பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணேத் தலைவர் பதவி ஏற்றுக்கொண்டு, ஆறுமாதகாலம் முடிவதற்குள் அவர்கள்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது.
22. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணைத் தலைவரை எப்படி நீக்குவது ?
ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவர் துணைத் தலைவர், தமது கடமையைச் செய்யத் தவறிவிட்டார்; வேண்டும் என்றே, சட்டப் பிரிவுகளையும், விதிகளையும், அரசாங்க உத்தரவுகளையும் நிறைவேற்ற மறுக்கிருர் , தமது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிருர், என்று அரசாங்கம் அபிப்பிராயப்பட்டால், சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணைத் தலைவருக்கு குறிப்பிட்ட தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்கம் கிடைத்து, அந்த விளக்கம் அரசாங்கத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்குமாயின், நோட்டீஸ் சம்பந்தமாக மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடலாம். குறிப்