பஞ்சாயத்து யூனியன் நடத்துவது எப்படி? 1. பஞ்சாயத்து ஆனியன் கவுன்சில்களின் அமைப்பு முறை எப்படி ? அரசாங்கம், குறிப்பிடும் தேதியிலிருந்து ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஒன்று நிறுவப்பட வேண்டும். பஞ்சாயத்து யூனியன் நிர்வாகப் பொறுப்பு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலைச் சேர்ந்தது. ஆனல், சட்டத்தின்படியாவது வேறு எந்தச் சட்டத்தின்படியாவது அல்லது இவற்றிலைாவது தெளிவாக, அதனுடைய தலைவருக்கோ, அல்லது அந்தக் கமிஷனருக்கோ, அல்ல்து வேறு யாராவது ஒரு அதிகாரி அல்லது அதிகார் ஸ்தாபனத்திற்கோ தெளிவாக ஒப்படைக்கப் பட்டிருக்கும் அலுவல்களைச் செய்யும் உரிமை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குக் கிடையாது. ஒரு பஞ்சாயத்து யூனியனின், எந்தப் பகுதியிலாவது பஞ்சாயத்து இல்லாவிட்டால் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது அதன் தலைவர் அல்லது கமிஷனர் தமக்கு இருக்கும் அலுவல்களைப் பஞ்சா யத்து அபிவிருத்தி வட்டாரத்தில் அப்படிப்பட்ட பகுதியில் செய்வார். ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது ஒன்றுபட்ட ஸ்தாபனத்திற்கும் தன்னுடைய கூட்டுப் பெயரால் வழக்குத் தொடுக்கும் அதிகாரமும் கொடுக்கப் பட்டுள்ள்து. அதனுடைய கூட்டுப் பெயரால் அதன்மேல் வழக்குத் தொடுக்கப்படவும் தகுதி உண்டு. ஸ்தாவர ஜங்கம சொத்துக்களை உரிமை செய்து கொள்ளவும், பணியாற்றவும் பராதீனம் செய்யவும்; அது ஏற்படுத்தப் பட்டுள்ள நோக்கங் களுக்குத் தேவையான அல்லது பொருத்தமான எல்லா விஷயங்களையும் .ெ ச ய் ய வு ம், ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளவும் அதற்குத் தகுதி உண்டு. (ப. ச. பிரிவு11) 2. ஆஸ்தி பொறுப்புகளை ஒழுங்கு படுத்துவது எப்படி ?
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/111
Appearance