பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


ஒரே ஒரு பஞ்சாயத்து அல்லது டவுன்ஷிப் கமிட்டி யைக் கொண்டுள்ள ஒரு பஞ்சாயத்து யூனியனின் விஷயத்தில் அந்தப் பஞ்சாயத்து அல்லது டவுன்ஷிப் கமிட்டி யின் அங்கத்தினர் அனைவரும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஆனியன் கவுன்சிலின் அங்கத்தினர்கள் ஆக வேண்டும். இது வால்ப்பாரை டவுன்ஷிப்புக்கும் சேர்வராயன் பஞ்சாயத்துக் கும் பொருந்தும்) - ஒரு பஞ்சாயத்து ஆனியன் .ெ த கு தி முழுவ தற்குமோ, அதன் ஒரு பகுதிக்கோ பிரதிநிதியாக இருக்கும் ராஜ்ய சட்ட சபையின் அங்கத்தினர் ஒருவர், அல்லது பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் வசிக்கின்ற மேல் சபையின் அங்கத்தினர் ஒருவரும் அந்தப்பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளுவதற்கு உரிமை உண்டு. ஆனால், அவருக்கு ஒட்டுச் செய்யும் உரிமை இல்லை. ஆயினும், சட்டசபை அல்லது மேல் சபையின் அங்கத்தி னர் ஒருவர், ஒரு பஞ்சாயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவ ராகவோ துணைத்தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்படும் தகுதி உள்ள்வர் ஆவார். 4. அங்கத்தினர்களின் பதவிக்காலம் எவ்வளவு ? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்களின் பதவிக் காலம், கூட்டு அங்கத்தினர்களாக நியமித்துக் கொள்ளப் பட்டவர்களும் கூட ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆளுல், ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அங்கத்தினர் ஒரு பஞ்சாயத்தின் தலைவராகவோ அங்கத்தினராகவோ இருப்பது அல்லது பஞ்சாயத்து யூனியனில் உள்ள ஒரு டவுன்ஷிப் கமிட்டியில் அங்கத்தினராக இருப்பது நீங்கிப் போகுமாளுல் அவருடைய பஞ்சாயத்து யூனியன் ஆவுன்சில் அங்கத்தினர் பதவியும் நீங்கிவிடும். y 5. தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்து எடுப்பது எப்படி ? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், அதனுடைய அங்கத்தி னர்களிடையே யிருந்து, அரசாங்கம் விதித்துள்ள முறைப்படி தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும்.