80
அரசாங்கம் 17.9.1960 தேதி எண் Ms 164 ட், A. உத்தரவில் தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பதற்கு உரிய விதிகளைச் செய்திருக்கிறது. இந்த நோக்கத்துடன் நடத்தப்ப்ட்ட ஒரு தேர்தலில் ஒரு தலைவரையோ, துனேத் தலைவரையோ தேர்ந்தெடுக்கவில்லையானல், புதிய தேர்தல் ஒன்று நடத்தப் பெற வேண்டும். ஆளுல், ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலில் உள்ள அங்கத்தினர் எல்லோரும் தனித்த ஒரு பஞ்சாயத்தின் அங்கத்தினர்களாகவோ தனித்த ஒரு டவுன்ஷிப் கமிட்டியின் அங்கத்தினர்களாகவோ இருப்பார் களானல்,
(1) முறையே தலைவரும் துணைத் தலைவரும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவர் ஆகவும் துணைத் தலைவராகவும் இருப்பர். -
(2) டவுன்ஷிப் கமிட்டியின் தலைவர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவர் ஆகவும், டவுன்ஷிப் கமிட்டியி லிருந்து விதிக்கப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் ஒருவர் கவுன்சிலின் துணைத் தலைவர் ஆகவும் இருப்பர்.
எந்த ஒரு தலைவர் துணைத்தலைவர் அல்லது அங்கத்தினருக் கும் இந்தப் பதவிகளின் மூலமாகவாவது வேறு எவ்விதத்திலா வது அவர் செய்த சேவையின் பொருட்டு, ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலினுடைய மேற் பார்வையில் அல்லது அதி காரத்தின் கீழ் இருக்கும் நிதியிலிருந்து பணம் கொடுக்கக் கி.பி.சிது.
5. அபேட்சகர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்
எவை? தகுதி இன்மை எது? ஒருவருடைய பெயர் ஒரு பஞ்சாயத்தின் வாக்காளர் பட் டியலில் இருக்குமானல் அவர் அந்தப் பஞ்சாயத்தின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி உள்ளவர்.
கிராமமுனிசீபு, கர்ணம் அல்லது கிராமசேவகர் மற்றும் ராஜ்ய அரசாங்கம் அல்லது மத்திய அரசாங்கம் அல்லது ஒரு பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், முனிசிபல் கவுன்சில் அல்லது சென்னை கார்ப்பரேஷன் ஆகியவற்றின் உத்தியோகஸ்தர் அல்லது ஊழியர் அங்கத்தினர்ர்கத் தேர்ந்தெடுக்தப் படுவதற்கும் அங்கத்தினராகப் பதவி வகிப்ப தற்கும் தகுதி இல்லாதவர் ஆகிரு.ர்.