82
யிலும் முன் வருஷத்தின் முடிவு வரையிலும் பஞ்சாயத்துக்கு அவர் பாக்கி கொடுக்கவேண்டியிருக்குமானல் நீதி வழங்கும் தன்மை தவிர வேறு வகையில் அதன் பொருட்டு அவருக்கு ஒரு நோட்டீசாவது, ' பில் 'லாவது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு, அதில் ஏதேனும் கால வரையறை குறிக்கப் பட்டிருந்து அந்தக் காலம் கடந்து போயிருக்குமானல், இத்தகையோர் அனைவரும் தகுதி இல்லாதவர்கள்.
அங்கத்தினர்களின் தகுதி இன்மையைப் பற்றி தீர்ப்பு அளிக்கும்படி யாருக்கு விண்ணப்பம் செய்துகொள்ள வேண் டுமோ அந்த நீதிமன்ற அதிகாரி நீலகிரியைத் தவிர மற்ற ஜில்லாக்களில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன் சில் இருக்கிற பிரதேசத்தின் மீது அதிகாரம் உள்ளவரான ஜில்லன் முன்சீபு ஆவார். அத்தகைய ஜில்லா முன்சீபுகள் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்களானால் அவர்களில் தலைமைவகிப்பவரான ஜில்லா முன்சீபுக்கும் நீலகிரி ஜில் லாவின் விஷயத் தி ல், உதகமண்டலம் சபார்டின்ேட் ஜட்ஜுக்கும் விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும். ஆஞல், நீலகிரியைத் தவிர பிற ஜில்லாக்களின் விஷயத்தில், அத்தகைய விண்ணப்பம் எதையும், அந்த ஜில்லாவிலிருக்கும் வேறு எந்த ஜில்லா முன்சீபுக்கும் மாற்றிவிட ஜில்லா நீதி பதிக்கு அதிகாரம் உண்டு. அப்படிப்பட்ட தீர்மானம் முடிவ டையாது இருக்கும் நிலையில், அந்த அங்கத்தினர் தமக்குத் தகுதி இருப்பது போலவோ, தகுதி இல்லாதது போலவோ நடந்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு.
ஒரு பஞ்சாயத்தின் தேர்தலில் அபேட்சகராக நிற்க விரும்புகிறவர் அல்லது ஒரு பஞ்சாயத்து அல்லது ஒரு பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலின் அங்கத்தினர் ராஜ்யத்திலிருக்கிற ஒரு பஞ்சாயத்து அல்லது ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லுடன் செய்து கொள்ளப்பட்டிருக்கிற ஒர் ஒப்பந்தத்திலாவது அல்லது ஆதற்காகச் செய்யப்படும் வேலையிலாவது ஏதேனும் சம்பந்தம் கொள்வாராளுல் அவர் தகுதி இல்லாதவர் ஆகிரு.ர்.
7. தலைவருடைய கடமைகளும் அலுவல்களும்
எவை ?
தலைவருடைய முக்கியமான கடமைகளாவன : பஞ்சா :த்து யூனியன் கவுன்சிலின் கூட்டங்களைக் கூட்டுதல் ;