83
33 சட்டமும் அதன் விதிகளும் தலைவருக்கு அளித்திருக் கும் அதிகாரங்களையும் தனிப்பட விதிக்கப் பட்டிருக்கும் கடமைகளையும் நிறைவேற்றுதல் : தலைவர், தம்முடைய பதவியின் காரணமாக பஞ்சா பத்து யூனியன் கவுன்சிலின் ஒவ்வொரு கமிட்டியிலும் அங்கத் தினராக இருக்கிருர் ; பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் எல்லா தஸ்தாவேஜுகளையும் பார்க்கும் உரிமை உள்ளவராக இருக்கிருர் ; கவுன்சிலுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நடைபெறும் கடிதப் போக்குவரத்துகள் எல்லாம் தலைவர் மூலமாகவே நடை பெற வேண்டும். கமிஷனர், தலைவர் மூலமாக அனுப்பும் கடிதங்களை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது தலைவருடைய கடமை ஆகும். சட்டத்தின் பிரகாரம் ஆரம்பப் பள்ளிகள், தாய்சேய் நலச் சங்கங்கள், ஏழை விடுதிகள், அனதைக் குழந்தைகளுக் கான விடுதிகள், சத்திரங்கள், பஞ்சாயத்து யூனியன் சந்தை கள் என்று பாகுபாடு செய்யப் பட்டிருக்கும் பொதுச் சந்தை கள் போன்ற பல்வேறு ஸ்தாபனங்களை வைத்து நடத்தும் பொறுப்பு பஞ்சாயத்து யூனியனிடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த ஸ்தாபனங்கள் சரிவர வேலே செய்வதையும் இத்தகைய ஸ்தாபனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, பொது ஜனங்களுக்கு அதிகமான நன்மையைத் தரும்விதமாகச் செலவழிக்கப்படுவதையும் உறுதி செய்யக்கூடிய பெரும் பொறுப்பு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்கு இருக்கிறது. இதன் பொருட்டு, தலைவர் இந்த ஸ்தாபனங்களை இடை விடாமல் கண்காணித்துவர வேண்டும் எனவும் இவற்றின் அன்ருட நடைமுறைகளைப் பற்றிய செய்திகளே நன்ருகத் தெரிந்துகொள்பவராக இருக்கவேண்டும் எனவும் அரசாங்கம் கருதுகிறது. ஆகையில்ை, உத்தியோக சம்பந்தமான காரியங் களுக்கும் தணிக்கையின் பொருட்டு) மேற்பார்வை இடுவதற் காகச் செல்வதற்கும் வட்டார அபிவிருத்தி ஜீப்பை பஞ்சா உத்து யூனியன் கவுன்சிலின் தலைவர் உபயோகப்படுத்த அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. மேற்படி ஜீப்பை, தலைவர் நன்முக பயன் படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, தலைவருடன் கலந்தாலோசித்து கமிஷனர் வாரத்திற்கான ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் எனவும் அரசாங் கம் உத்தரவிட்டிருக்கிறது. 8. தலைவருடைய அலுவல்களை வேறு ஒருவருக்கு மாற்றுவது எப்படி ?