87
தலைவர் கேட்டுக் கொண்டால், கவுன்சிலின் எந்த ஒரு கூட்டத்திற்கோ; அல்லது அதன் கமிட்டியின் கூட்டத்திற்கோ ஆஜராகி இருப்பது ;
கவுன்சிலின் தீர்மானங்களை அமுல் நடத்துவது : ஏதாவது ஒரு தீர்மானம் சரியில்லை என்ருே அல்லது செல்லு படியாகத் தகாததாக இருந்தது என்ருே கமிஷனர் கருதுவா ரானல் , அந்தத் தவறையோ, குறைபாட்டையோ மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதுதான் அவர் செய்யக்கூடியது. அதை அமுல் நடத்தக் கூடாது என்பது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்குமானுலும் அவர் அதை அமுல் நடத்த மறுக்கக் கூடாது ;
கவுன்சில் உத்தரவிடும்போது, க வு ன் சி ல் செய்த தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அடைந்திருக்கும் முன் னேற்றம், வரி வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி ஆகிய வைபற்றிய அறிக்கைகளே அவ்வப்போது கவுன்சிலுக்கு அளிப்பது;
கவுன்சிலின் எல்லா உத்தியோகஸ்தர்களையும் ஊழியர் களையும் நிர்வகிப்பது.
பிரத்யேகமாகக் கொடுக்கப்படுகிற கடமைகள் எல்லா வற்றையும் செய்வது ; சட்டத்தினுலும் விதிகளிலுைம் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற அதிகாரங்களை எல்லாம் அவற்றில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும் வரையறை களுக்கும் உட்பட்டுச் செலுத்துவது; சட்டத்தின் நோக் கங்களை ஒழு ங் கா. க நிறைவேற்றுவதில் நேரிடையான பொறுப்பு உள்ளவராக இருப்பது ;
சட்டத்தின் வெவ்வேறு விதிகளில் கூறப்பட்டுள்ள கட்டுப் பாடுகளுக்கிணங்க கமிஷனருக்குச் சட்டத்தின்படி கொடுக்கப் ப ட் டு ள் ள அலுவல்களில் எவைபற்றியும் திட்டமான கட்டளைகளைப் பிறப்பிக்கக் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளை சமுதாய அபிவிருத்திக்கான தேசீய சேவைத் திட்டம் எதற்காவது அல்லது பஞ்சாயத்து யூனியனிடம் அரசாங்கத்தால் ஒப்படைக்கப் பட்டுள்ள வேறு எந்தத் திட்டத்திற்காவது தொடர்புள்ளதாக இருக்குமானல், இந்தக் கட்டளைகள், அந்த ஒப்படைப்பு உத்தரவுக்கும் நிபந்தனை களுக்கும் ஒத்திருக்க வேண்டும்.