பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


அரசாங்கம் அல்லது கவுன்சில் விதித்துள்ள கட்டளைகளுக் கும் கட்டுப்பாடுகளுக்கும் இணங்க கமிஷனர். தமிழிடைய அலுவல்களில் எவற்றையேனும் அரசாங்கத்தின் ஏதாவதொரு உத்தியோகஸ்தருக்கோ அல்லது ஊழியருக்கோ டெவிகேட் செய்யலாம் என்று 44 (6) பிரிவு கமிஷனருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த டெலிகேஷன் கமிஷனர் விதிக்கும் வரை யறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது, மேலும் அதை ரத்து செய்யவும், கண்காணித்துக் கட்டுப்படுத்தவும் அவருக்கு அதிகாரம் உண்டு. நெருக்கடியான சந்தர்ப்பங்களில், கவுன்சிலின் அனுமதி தேவையான எந்த ஒரு வேலையையாவது உடனே செய்து முடிப்பது பொது ம்க்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பிற் கும் அவசியம் என்று கமிஷனர் கருதினால், எந்த ஒரு வேலையை விஸ்தரிக்கவும் அல்லது செய்யவும் கட்டளேயிடவும் கூடக் கமிஷனருக்கு அதிகாரம் உண்டு. ஆளுல், குறிப்பிட்ட எந்த வேலையையாவது நிறைவேற்றக் கூடாது என்ருே ஏதேனும் ஒரு செயலைச் செய்யக்கூடாது என்ருே கவுன்சிலின் உத்தரவு இருக்குமானல், அந்த உத்தரவை மீறி அவர் நடக்கக்கூடாது. எடுத்துக்கொண்ட நடவடிக்கையையும் அதற்கு உரிய காரணங்களையும் பற்றி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அவர் அறிக்கை மூலம் சமர்ப்பிக்க வேண்டும். 13. கமிஷனரும் சேர்மனும் இணக்கமாக வேலை செய்வது எப்படி? கவுன்சிலின் மூலமாகவும், தலைவர் மூலமாகவும், கமிஷனர் மூலமாகவும் நடத்தி வைக்கப்பட வேண்டிய திட்டம் பின் வருமாறு : கமிஷனர், பஞ்சாயத்து யூனியனின் நடவடிக்கைகளை நடத்தி வைக்கும் நிர்வாக அதிகாரி ; பஞ்சாயத்து யூனியன் மீது உத்தரவு செலுத்தும் அமைப்பு கவுன்சில் ஆகும். கமிஷன ருக்குக் கட்டளை இடவும் கவுன்சிலுக்கு உரிமை உண்டு. நிர்வாக உத்தியோகஸ்தரான கமிஷனரிடம் பஞ்சாயத்து யூனிய்னின் அலுவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன். கவுன் சிலின் சட்டத்திற்கு உட்பட்ட எல்லாத் திட்டங்களையும் கட்டளைகளையும், நிறைவேற்றுமாறு அவரிடம் எதிர்பார்க்கப் படுகிறது.