பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


தலைவர், கவுன்சிலின் தலைமை வகிக்கும் அதிகாரியாக இருப்பதால் பஞ்சாயத்து யூனியனின் அன்ருட நிர்வாகத் தைப் பற்றிய செய்திகளே தொடர்ந்து அவருக்கு அறிவிக்கக் கூடிய உரிமையை கமிஷனர் பெற்றிருக்கிருர், எந்த விஷயங் களைப் பற்றியும் கமிஷனர் தலைவரோடு முன்கூட்டியே கலந்து ஆலோசிப்பதால் கமிஷனரும் தலைவரும், கவுன்சிலும், எந்தத் திட்டத்தை சிக்கல் இல்லாமல் நடத்தமுடியுமோ அந்த விஷயங்களைப் பற்றித் தலைவரோடு கமிஷனர் முன்கூட்டியே கலந்து ஆலோசிக்க வேண்டும் என முற்ை ஏற்படுத்துவது திட்டத்தோடு பொருத்தமானதாக இருக்கும். 14. கடிதப் போக்கு வரத்தைப் பைசல் செய்வது எப்படி ? கமிஷனருக்கும் தலைவருக்கும் இடையே நல்லுறவு நிலவு வதை உறுதிசெய்யும் பொருட்டு, அலுவலக சம்பந்தமான கடிதப் போக்கு வரத்தைப்பற்றி அரசாங்கம் கீழே கண்டபடி உத்தரவுகளைச் செய்திருக்கிறது. அதாவது : வருகின்ற தபால்கள் : கமிஷனர், தபால்களைப் பார்வை யிட்ட பிறகு, தலைவர் பார்வை இடுவதற்காக அனுப்ப வேண்டும். தலைவர், எல்லா தபால்களையும் பார்வை இட வேண்டுவதும் தாமதமின்றி, எவ்வாருயினும் 24 மணி நேரத் திற்குள் திருப்பி அனுப்பி விடவேண்டியதும் அவசியம். வெளியே அனுப்பப்படுகிற தபால்கள் : முன்னர் கூறி ய படி, கமிஷனரிடமிருந்து அரசாங்கத்திற்கும், கலெக்டருக்கும், ரெவினியு டிவிஷனல் அதிகாரிக்கும் மற்றும் இலாகா தலைவர் களுக்கும் அனுப்பப்படுகிற தபால்கள் எல்லாம் எப்பொழுதும் தலைவர் மூலமாகச் செல்லவேண்டும். தலைவருடைய அபிப் பிராயம் கமிஷனரின் அபிப்பிராயத்திற்கு மாறுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இருவரும் கலந்து பேசி ஒர் உடன்பாட்டிற்கு வர முயற்சிக்க வேண்டும். அவ்விதம் உடன்பாட்டுக்கு வர முடியாவிட்டால், தஸ்தாவேஜின் ஒரு நகலில் அந்த விஷயத் தில் தம்முடைய கருத்தையும் எழுதி அனுப்ப வேண்டும். தாம் எழுதிய அபிப்பிராயங்களின் ஒரு நகலைச் சம்பந்தப்பட்ட பை வில் வைத்துக் கொள்ள வேண்டும். 15. கமிஷனரின் மற்ற அதிகாரங்கள் எவை? விசாரணை அ ல் ல து பார்வையிடுவதன் பொருட்டு எந்த ஒர் இடத்திற்கோ, கட்டிடத்திற்கோ செல்வது.