பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


ஒரு பஞ்சாயத்து அபிவிருத் தி வட்டாரத்திற்குள் ளாவது ஒரு கிராமத்திற்குள்ளாவது ஒரு நகரத்திற்குள்ளாவது ஆபத்தான வியாதி ஏதேனும் நிலவுமானல் பொதுக் கேளிக்கை இடங்களை மூடிவிட உத்தரவு இடுதல். தொத்து நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்களை பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லாமல் தடை செய்தல். ஆபத்திற்கிடமான குளங்கள், கிணறுகள், பள்ளங்கள் முதலியவற்றின் விஷயத்தில் முன் எச்சரிக்கை எடுத்துக் கொள்ளுதல். கட்டிடங்களிலிருந்தும் நிலங்களிலிருந்தும் குப்பை அல்லது தீங்கு விளைவிக்கும் ப்யிர்களை நீக்க உத்தரவு இடுதல். எடுத்துக்கொள்ளப்பட்ட அ ல் ல து வெட்டப்பட்ட அல்லது அப்புறப்படுத்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை, ஏற்பட்ட செல்வுக்கு ஈடுசெய்தல். பிராணிகளையேனும் பொருட்களையேனும் ஒரு பொதுச் சாலையிலாவது பொது இடத்தில்ாவது அல்ல்து அவற்றின் ஒரு பாகத்திலாவது விற்பனை செய்வதைக் கவுன்சிலின் அனுமதி பெற்றுத் தடை செய்தல். நோட்டீசுகளிலும் உத்தரவுகளிலும் கண்ட விஷயங்களை அமுல் நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட தண்டனையை விதித்தல், செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் இருப் பதற்காகவும், குற்றங்களுக்காகவும் பிரஸ்தாப நபர்களின்மீது குற்றம் சாட்டுதல் முதலியன. சட்டத்திற்கு எதிராக, அல்லது சட்டத்தின்கீழ் செய்யப் பட்டிருக்கும் ஏதாவது விதி அல்லது துணை வி தி க் கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களை எந்த விதிகளின்படி ராஜி செய்துகொள்ளப்படலாமோ அப்படிச் செய்து கொள்ளுதல். செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளையாவ து ராஜி செய்யப் பட்ட குற்றங்களேயாவது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அறிவித்தல்.