பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


தின் பொறுப்பேற்றிருக்கும் வேறு ஒருவரிடமாவது அலுவலக வேலை நேரத்தில் கூட்டத்தின் நாளுக்குக் குறைந்த பட்சமாக பத்து நாட்கள் முன்பாவது கொடுக்க வேண்டும், வேண்டுகோள் கிடைத்து ஐந்து நாட்களுக்குள் தலைவர் ஒரு கூட்டத்தை அமைக்காவிடில், அந்த வேண்டுகோளில் கையொப்பமிட்டிருக்கிற அங்கத்தினர்களே விதிக்கப்பட்டுள்ள முறையைப்பின்பற்றி ஒரு கூட்டத்தை கூட்டலாம். ஒரு புதிய தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்: தெடுக்கும் பொருட்டுக் கூட்டப்படுகிற கூட்டங்கள் விசேஷ் கூட்டங்கள் என்று கருதப்படுகின்றன. கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை கமிஷனர், தலைவருடன் கலந்தாலோசித்து தயாரிக்க வேண்டும். கமிஷனரின் கருத்துப் படி, கவுன்சிலால் ஆலோசனை செய்யப்பட வேண்டிய எந்த விஷயத்தையும், தலைவரால் கூறப்படுகிற எந்த விஷயத்தை யும் கமிஷனர் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கலாம். கவுன்சிலில் அப்பொழுது உள்ள அங்கத்தினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அங்கத்தினர் ஆஜராக இருந்தாலன்றி, ஒரு கூட்டத்தில் அலுவல் எதுவும் நடை பெறுவது கூடாது. கூட்டம் நடைபெறுவதற்காக குறிக்கப் பட்ட நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்குள், கோரம் சேரவில்லையாளுல், வந்திருக்கும் அங்கத்தின்ர் எல்லோரும் மேலும் காத்திருக்கச் சம்மதிக்கும் வரையில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக ஆகும். 18. தீர்மானங்களை மாற்றி அமைக்கலாமா ? கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தேதியி லிருந்து மூன்று மாதங்களுக்குள் அதை மாற்றவோ ரத்து செய்யவோ, கூடாது, அதற்கென தனிப்படக் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்கையில் பாதிப்பேர்களுக்குக் குறையாத எண்ணிக் கையினரால் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்தால், ஆதரிக் கப்பட்டால் மாத்திரமே அந்தத் தீர்மானத்தை மாற்றவோ ரத்து செய்யவோ முடியும். 19. நடவடிக்கைகளை எழுதி வைப்பது எப்படி? கவுன்சிலில் ஒவ்வொரு கூட்டத்தின் நடவடிக்கைகளின் குறிப்புகளை (மினிட்ஸ் எழுதி அதற்காக வைக்கப்பட்டுள்ள