பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


கூட்டங்களில் ஒழுங்கு நிலவுமாறு தலைவர் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டங்களிலாவது கூட்டங்களைப் பற்றியாவது ஏற்படுகிற ஒழுங்குப் பிரச்னைகளில் தீர்ப்பு அளிக்க வேண்டும். எந்த ஓர் ஒழுங்குப் பிரச்னையின் மீதும் விவாதம் செய்தல் கூடாது. தலைவரின் தீர்ப்பே முடிவானது. 22. அங்கத்தினர்கள், விவாதத்தில் கலந்து கொள்ளாமலும், ஒட்டுப் பதிவில் கலந்து கொள்ளாமலும் இருக்க வேண்டிய சமயம் எது? எந்த ஒரு பிரச்னையிலாவது, ஒர் அங்கத்தினருக்கு நேரிடை உாகவாவது மறைமுகமாகவாவது பண வரவுக்கு உரிய சம்பந்தம் இருக்குமானல், அந்தச் சம்பந்தம் தம் மூலமாக இருந்தாலும் சரி தம் பாகஸ்தரின் மூலமாக இருந்தாலும் சரி அவர் அந்தப் பிரச்னை பற்றிய விவாதத்திலாவது ஒட்டு அளிப்பிலாவது கலந்து கொள்ளக்கூடாது. கூட்டத்தில் ஆஜர் ஆதி இருக்கிற எந்து ஒர் ஆங்கத்தின ராவது, தலைவர் அல்லது சேர்மனே விவாதிக்கப்படுகிற எந்த ஒரு விஷயத்திலாவது LಣT வரவுக்கு உரிய சம்பந்தம்உள்ளவர் என்று சந்தேகம் கொள்வாரானல், கூட்டத்தில் அத்தகைய விவாதம் நடைபெறும்பொழுது o கூட்டத்தில் அந்தச் சேர்மனே, தலைவரோ ஆஜராக இருக்கக் கூடாது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தடை செய்யலாம். 23. ஒழுங்கு விதிகளை வகுப்பது எப்படி? கவுன்சிலினுடைய கமிட்டிகளினுடைய நடைமுறை களேப் பற்றிய ஒழுங்கு விதிகளை வகுத்துக் கொள்ளவும் அவற்றை அமுலுக்குக் கொண்டு வரவும் இன்ஸ்பெக்டர் அல்லது கூட்டு அபிவிருத்திக் கமிஷன்ருடைய சம்மதத்தைப் பெற்ற பிறகே பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் அதிகாரம் உள்ளவை ஆகின்றன. 24. தீர்மானங்களைக் கொண்டு வருவது எப்படி? ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர விரும்புகிற ஒர் அங்கத்தினர், அவ்விதம் தாம் விரும்புவதை தலைவருக்கு எழுத்து மூலமாகத் தெளிவாக 10 நாட்கள் முன் அறிவிப்புச்