பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


செய்ய வேண்டும். அந்த முன் அறிவிப்பில் அவர் தொண்டுவர விரும்புகிற தீர்மானத்தின் நகல் ஒன்று இருக்த Gఫ్లోరు, ஆனல், பத்து நாட்களுக்குக் குறைவான முன்அறிவிப்பின் பிேரில் ஒரு தீர்மானத்தை நிகழ்ச்சி நிரலில் பதிவு செய்ய தலைவர் அனுமதிக்கலாம். பின்வரும் நிபந்தனைகளுக்கு ஒத்திராத எந்தத் தீர் மானத்தையும் தலைவர் அனுமதிக்கக் கூடாது ; தெளிவான திட்டமான வாசகத்தில் சொல்லப்பட் டிருக்க வேண்டும்; மற்றும் திட்டமான ஒரு விஷயத்தைக் கொண்டு வரவேண்டும். அதில் விவாதங்களோ, அனுமானங்களோ, வஞ்சப் புகழ்ச்சியான வாசகங்களோ, அவதுருன வாக்கு மூலங்களோ இருக்கக் கூடாது. மற்றும் தனிநபர்களுடைய நடத்தை அல் ல்து இயல்பு பற்றி அவர்களுடைய உத்தியோகத் தன்மையில் அல்ல்து பொதுத் தன்மையில் அல்லாமல் வேறு தன்மை வில் சொல்லக்கூடாது. ஒரு தீர்மானம், அனுமதிக்கத் தகுந்ததா என்பதைத் தலைவர் தீர்மானிக்க வேண்டும். அவருடைய தீர்மானம் முடிவானது. தலைவருடைய அபிப்பிராயப்படி, ஒரு தீர்மானம் பஞ்சாயத்து யூனியனின் நிர்வாகத்திற்குத் தொடர்பு இல்லாததாக இருக்குமானல், அவர் அந்தத் தீர்மானத்தை அரசாங்க மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி அதை அனுமதிக்க லாமா என்பது பற்றி அவர்களுடைய உத்தரவைப் பெற வேண்டும், ஒழுங்கானதும் முன்கூட்டியதுமான அறிவிப்பு இல்லாமல் ஒரு கூட்டத்தில் எந்த ஒரு தீர்மானத்தையும் கொண்டுவரக் கூடாது. மிகவும் அசாதாரணமான சந்தர்ப் பங்களில் அவசரத் தன்மை கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றிய ஒரு தீர்மானத்தை முன் அறிவிப்பு இல்லாமல் கொண்டு வரலாம் : அப்பொழுது கவுன்சிலின் எல்லா அங்கத் தினர்களும் ஆஜராக இருக்க வேண்டும், அவர்கள் அதற்கு அனுகூலமான அபிப்பிராயம் கொண்டிருத்தல் வேண்டும். சட்டசபை அங்கத்தினர்களும் மேல்சபை அங்கத்தினர்களும் கவுன்சில் கூட்டங்களில் தீர்மானங்களைக் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.