உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


25. தலைவரை கேள்விகள் கேட்பது எப்படி? கேள்விகள் கேட்க விரும்புகிற அங்கத்தினர், தம் உத்தேசத்தை தலைவருக்கு எழுத்து மூலமாகக் குறைந்த பட்சம் தெளிவாகப் பத்து நாட்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும், அத்தகைய ஒரு அறிவிப்புடன் அவர் கேட்க விரும்பும் கேள்விகளின் நகல் இருக்க வேண்டும். ஒரு கேள்வி கீழ்க்கண்ட நிபந்தனைகளைத் திருப்தி செய் வதாக இருக்க வேண்டும். கேள்வியை விளங்கச் செய்வதற்காக கண்டிப்பாகத் தேவையில்லாத எந்த ஒரு பெயரையாவது வாக்குமூலத்தை யாவது வெளியிடலாகாது. அதில், ஒரு வாக்குமூலம் இருக்குமானல், அதைக் கேட்கிற உறுப்பினர், அந்த வாக்குமூலம் சரியானதாக இருப் பதற்குத் தாமே பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும். அதில், விவாதங்களாவது, அனுமானங்களாவது, வஞ்சப் புகழ்ச்சியான வாசகங்களாவது, அவதுரரு ைவாக்கு மூலங்களாவது இருக்கக் கூடாது. ஒர் அபிப்பிராயத்தைக் கூற வேண்டும் என்று கேட்கக் கூடாது ; ஊகிக்கத்தக்க முறையிலோ, சட்டப் பிரச்னையைப் பற்றியோ கருத்து தெரிவிக்கும்படி கேட்கக் கூடாது. எந்த ஒரு நபரின் இயல்பு அல்லது நடத்தையைப் பற்றி அவருடைய உத்தியோகத் தன்மை அல்லது பொது வாழ்வு தன்மையில் அல்லாமல் வேறு வகையில் கேட்கப்படக் கி.டTது. கேள்வி மிக நீளமானதாகவும் இருக்கக் கூடாது. ஒரு தடவை, ஒரு கேள்விக்கு முழுதும் பதில் சொல்லி விட்டால், மீண்டும் அதே கேள்வியைக் கேட்கக் கூடாது. கேள்வி அனுமதிக்கத் தகுந்ததா இல்லேயா என்பதை தலைவர், அறிவிப்பு கெடுவுக்குள் தீர்மானம் செய்துவிட வேண்டும். உபகேள்விகளே அனுமதிப்பதோ அனுமதிக்காமல் இருப்பதோ தலைவருடைய அபிப்பிராயத்தைப் பொறுத்தது. மினிட்ஸ் புத்தகத்தில், கேள்விகளும் அவற்றிற்கு தலைவர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 7