105
விவசாய விஸ்தரிப்பு அதிகாரியானவர், வட்டாரத்தில் பயிர்த் தொழில் வேலைத் திட்டத்திற்கு முக்கியமான பொறுப்பு உள்ளவர். கால்நடை வளர்ச்சி விஸ்தரிப்பு அதி காரி வீட்டுப் பிராணிகளின் நோய்ச் சிகிச்சை திட்டங் களுக்கும் பொறுப்புள்ளவர். கூட்டுறவு விஸ்தரிப்பு அதிகாரி யானவர் கூட்டுறவுச் சங்கங்களை அமைக்கும் பொறுப்பு உள்ள வர். சமூகக் கல்வி அமைப்பாளரின் முக்கியமான பொறுப்பு, மக்களுக்குத் திட்டத்தை விளக்கம் செய்வதும் அதில் அவர்கள் முழுப் பங்கு எடுத்துக் கொண்டு ஈடுபடச் செய்வது ஆகும். கமூகக் கல்விக்கான (பெண்) அமைப்பாளர்கள் பெண்களுக் கான திட்டங்களைப் பற்றித் தனிப்பட்ட கவனம் செலுத்துவர்.
நாட்டுப்புற அபிவிருத்தியின் நிர்வாக அமைப்பில் முக்கிய மான இணைப்பாக இருப்பவர் கிராமசேவக் ஆவார். அவர் எல்லா இலாகாக்களுக்கும் பொதுவானவர்; பல நோக்கங் களுக்கான பணியாளர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூட்டுறவு, பஞ்சாயத்துக்கள், தொழில்கள் ஆகிய துறைகளின் விஸ்தரிப்பு அதிகாரிகள் கொடுக்கும் அலுவல்களை எல்லாம் அவர் சாதாரணமாகச் செய்யவேண்டும்.
சமூகக் கல்வி அமைப்பாள்ர்களுக்கும் அவர் உதவி செய்ய வேண்டும். அவருடைய தொகுதியில் இருக்கும் கிராமம் ஒன் நில் அவர் வசிக்க வேண்டும். எல்லா அபிவிருத்திச் செயல் களிலும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் அரசாங்க இலாகாக்களுக்கும் இடையே ஒரு பொதுவான போக்கு வரத்துக் கால்வாய்போல அவர் பணி ஆற்ற வேண்டும்.
கிராம சேவக்குக்ளால் கிராம வாசிகளுக்கு உண்மையான உதவி இருக்க வேண்டும். அந்த அந்த இடத்தின் நிலைமைகள், தேவைகள் ; கஷ்டங்கள் ஆகியவைபற்றி அவர் நேரில் தெரிந்து கொள்ள வேண்டும். அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவதற் கான பொதுவான போக்குவரத்து கால்வாய்போல அவர் இருப்பதால் கிராம வாசிகளோடு தொடர்ச்சியாகவும் நெருக்கமாகவும் தொடர்பு வைத்துக்கொண்டு அவர் களுடைய ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
39. ஸ்தாபனங்களுக்கு விடுமுறை.
அரசாங்க அலுவலகங்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் அவ்வப்பொழுது விடப்படுகிற பொதுவிடுமுறை நாட்களும்