106
விசேஷ உள்ளுர் விடுமுறை நாட்கள் மாத்திரமே கவுன்சில் களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களுக்கும் ல்தாபனங்களுக்கும் உண்டு. எனினும், கல்வி ஸ்தாபனங் களுக்கு விடுமுறை ஆளிப்பது, தமிழ்நாடு கல்வி இலாகா விதி களுக்கு ஒத்திருக்க வேண்டும்,
40. அதிகார பூர்வமான அலுவல்கள் எவை? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்கு அதிகார பூர்வ மாக ஏற்பட்டுள்ள முக்கிய அலுவல்கள் பின்வருமாறு :
(1) பஞ்சாயத்து யூனியன் ரோடுகள் என்று தரப்படுத்தி யுள்ள சாலைகள், மேற்படி சாலைகளின் மேல் அமைந்திருக்கும் பாலங்கள், மதகுகள், சாலை அணைக்கட்டுகள், சாலைகளின் மீது உள்ள மேடைப் பாதைகள் ஆகியவற்றை அமைப்பது ;
(2) இலவச வைத்தியசாலைகளை ஏற்படுத்தி அவற்றை நடத்தி வருவது; மற்றும் கிராமப் பகுதிகளில் இருக்கும் வைத்தியர்களுக்கு (ரூரல் மெடிகல் பிராக்டீஷணர்களுக்கு) உதவித் தொகை அளிப்பது.
(3) தாய், சேய்நல விடுதிகளை ஏற்படுத்தி, நடத்தி வரு வது; 'தாயி உதவிப் பணியை நடத்தி வருவது; மற்றும் தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வதில் ஆலோசனை கூறுவதும் உதவி புரிவதும்;
(4) ஏழை விடுதிகள், அளுதைக் குழந்தைகளுக்கான விடுதிகள், கடைகள், ஸ்டால்கள் ஆகியவற்றை அமைத்து பராமரித்து வருவது; அம்மைப்பால் குத்துவோர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை வேலைக்கு அமர்த்துதல்; ஜன. நெருக்கத்தை நீக்குவதும் வீட்டு மனைகளைக் கொடுத்து உதவு தலும்;
(3) ஆரம்பப் பள்ளிகளை ஏற்படுத்தி அவற்றை நடத்தி வருவது; அவற்றை பெரிதாக்குவது அல்லது அபிவிருத்தி செய்வது, ஆரம்பப் பள்ளிகளை நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு மான்யம் வழங்குவது;
(6) பெருவாரி நோய் அல்லது மலேரியா சம்மந்தமாக தடுப்பு முறைகளையும் சிகிச்சை முறைகளையும் கையாள்வது ;