110
பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குத் தேவைப்படுகிற ஸ்தாவர சொத்தை 1894-ஆம் வருஷத்திய நில ஆர்ஜித சட்டத்தின்படி, ஆர்ஜிதம் செய்து கொள்ளலாம். மேற்படி சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கிற நஷ்ட ஈட்டையும், ஏற்படு கிற இதர செலவுகளையும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அந்தச் சொத்து, கவுன்சிலுக்குச் சொந்தமாகிறது.
49. மார்க்கெட்டுகள் பற்றிய விவரம் என்ன?
ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அதன் வட்டாரத்தில் மார்க்கெட்டுகளைத் திறப்பதற்கும், கீழ்க்காணும் வரிகளுள் ஏதேனும் ஒன்றையோ, அல்லது அதிகமாகவோ விதிப்பதற்கு கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின் அனுமதியைப் பெற வேண்டும். மேற்படி வரிகள் நிர்ணயிக்கப்பட்ட அதிக பட்ச அளவைவிட அதிகமாகாமல் கவுன்சிலால் ஏற்படுத்தப்படுகிற விகிதங்களின்படி இருக்கவேண்டும்.
அத்தகைய மார்க்கெட்டில் விற்பனைக்கான பொருள் களை பார்வைக்கு வைக்கும் பொருட்டு விளக்கு வசதியை உப யோகிப்பதற்காகவோ, வெளிச்சத்திற்காகவோ கட்டணம்.
மார்க்கெட்டில், கடைகளையாவது ஸ்டால்களையாவது, தட்டுகளேயாவது, ஸ்டாண்டுகளையாவது உபயோகப்படுத்திக் கொள்வதற்குக் கட்டணம்.
மார்க்கெட்டிற்குள் விற்பனைக்காகச் சாமான்களைக் கொண்டுவருகிற மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களுக்கும், பிராணிகளுக்கும், விற்பனைக்காக மார்க் கெட்டிற்குள் ஏதாவது சாமான்களைக்கொண்டு வருகிற ஆட் களுககும் கடனம்,
மார்க்கெட்டிற்குள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட, அல்லது விற்பனை செய்யப்பட்ட பிராணிகளின்மீது கட்டணம்,
தரகர்களும், கமிஷன் ஏஜெண்டுகளும், எடை போடு கிறவர்களும், அளக்கிறவர்களும் மார்க்கெட்டில் தங்கள் தொழிலை நடத்துவதற்காக லைசென்ஸ் கட்டணம்.
பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலினிடமிருந்து லைசென்ஸ் பெற்றிருந்தாலன்றி, யாராவது புதிதாக ஒரு சொந்த மார்க் கெட்டை ஆரம்பிக்கவோ, தொடர்ந்து நடத்திக் கொண் டிருக்கவோ கூடாது. அத்தகைய லைசென்ளை ஒவ்வொரு