பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


விஷயங்கள் பற்றி கூறப்பட்டிருக்கின்றன. கிராமப் பஞ்சா யத்துக்ளின் விஷயத்தில், நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியின் சம்மதத்துடன் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஒர் அறிவிப்புச் செய்யலாம். அந்த அறிவிப்பில் இருத்தக்கூடிய விஷய மாவது : அந்தப் பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் இருக்கிற எந்த ஒரு பஞ்சாயத்துக் கிராமத்தின் எல்லைக் குள்ளும் இருக்கிற எந்த ஒர் இடத்தையும், அல்லது அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிற பஞ்சாயத்துக் கிராமம் அல்லது கிராமங்களில் இருக்கிற எந்த ஓர் இடத்தையும் சட்டத்தின் 111 (1) பிரிவின்படி கொடுக்கப்பட்டிருக்கிற அறிவிப்பில் கண்டுள்ள எந்தக் காரியத்திற்கும் லைசென்ஸ் இல்லாமல் உபயோகிக்கக்கூடாது. அந்த லைசென்ஸில் கூறப் ப்ட்டுள்ள நிபந்தனைக்குப் புறம்பான முறையிலும் உபயோகப் படுத்தக்கூடாது. இந்த அறிவிப்பைச் செய்யுமுன் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களே கலந்து ஆலோசிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகாரி, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமுன், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளின் அபிப்பிராயங்களையும் கவனிக்க வேண்டும். லைசென்ஸ் கட்டணம், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் களால் விதிக்கப்பட்ட போதிலும், பஞ்சாயத்து கிராமங்களின் விஷயத்தில் அந்தத் தொகை, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து களின் கணக்கில் வரவு வைக்கப்படும். 51. ஆபத்தான, ஆட்சேபகரமான தொழில்களை கட்டுப்படுத்தும் அதிகாரி யார்? ஆபத்தான மற்றும் ஆட்சேபகரமான தொழில்களின் மீது கட்டுப்பாடு செலுத்தும் அதிகாரம் ஹெல்த் இன்ஸ் பெக்டருடையது; ஏனெனில், அது தொழில் துணுக்கத்தைக் கொண்ட ஒர் வேலை. லைசென்ஸ் தேவையான, ஆபத்தான மற்றும் ஆட்சேபகரமான தொழில்களை ஹெல்த் இன்ஸ்பெக் டர் உடனுக்கு உடனே ரிபோர்ட் செய்ய வேண்டும்; லேசென்ஸுகள் இல்லாமல் அந்தத் தொழில்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். லைசென் ஸுக்கு அனுமதி கோரி வரும் எல்லா மனுக்களையும், மீண்டும் புதுப்பிக்க வேண்டுமெனக் கோரி வரும் எல்லா மனுக்களையும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பரிசீலனை செய்ய வேண்டும் ; பிறகு தம்முடைய சிபாரிசோடு பஞ்சாயத்து யூனியனின் கமிஷனருக்கு அனுப்ப வேண்டும்.