பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


லைசென்ஸுகளைக் கொடுப்பது, லைசென்லாக் கட்ட னத்தை வசூலிப்பது, ரிஜிஸ்தர்களை வைத்திருப்பது ஆகிய வேலைகளைப் பஞ்சாயத்து யூனியனில் ரெவினியூ இலாகா கவனிக்கும். பொதுச் சுகாதார அம்சத்தில், ஒரு தொழிலே ஒழுங்கு படுத்துவதற்கு ஏற்படக்கூடிய செலவிற்கு ஒத்ததாக இருக்கும் படி, லைசென்ஸுக் கட்டண விகிதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் லைசென்ஸுக் கட்டணத்தை ஒரு ரெவினியூவாக கொள்ளலாகாது என்றும் அரசாங்கம் உத்தரவு இட்டுள்ளது. 52. இயந்திரங்கள் நிறுவ அனுமதி வேண்டுமா? பஞ்சாயத்துக் கிராமங்களில், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அனுமதி இல்லாமலும், அத்தகைய அனுமதியில் கூறப்பட்டிருக்கிற நிபந்தனேகளுக்கு ஏற்ப இல்லாமலும் யாரேனும் ஒருவர், நீராவிச் சக்தி, ஜலசக்தி, இயந்திர சக்தி, மின்சார சக்தி இவற்றில் எதைக் கொண்டேனும் உபய்ேர் கிக்க திட்டமிடப்பட்டுள்ளதோ அத்தகைய தொழிற்சாலை, பட்டறை அல்லது தொழில் செய்யும் இடத்தைக் கட்டவோ ஸ்தாபிக்கவோ கூடாது. விதிகள் மூலம் விலக்கு அளிக்கப்படும் இயந்திரமாகவோ அல்லது உற்பத்தி செய்யும் இயந்திர அமைப்பாகவோ இல்லாத எந்தச் சக்தியையாவது கொண்டு. இயங்கும் ஒன்ற்ை எந்தஇடத்திலாவது ஸ்தாபனம் செய்யக் கூடாது. 53. தொழில் பிரதேசங்கள் எவை? எந்த ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும் தாளுக வேனும், அல்லது சம்பந்தப்பட்ட ரெவினியு டிவிஷன்ல் அதிகாரி உத்தரவிட்டாலும், பஞ்சாயத்து கிராமம் அல்லது கிராமங்களில் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களை, ஜில்லா ஹெல்த் ஆபீஸர் (மாவட்ட மருத்துவ அதிகாரி) மற்றும் நகர அமைப்புத் திட்ட டைரெக்டர் ஆகியோருடைய அனுமதி புடன் தொழில் காரியங்களுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும். தொழில் பிரதேசங்கள் என்று எவற்றை ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளனவோ அவற்றை தவிர வேறு ஒரு இடத்தில் தொழிற்சாலை, தொழில் பட்டறை அல்லது தொழில் செய்யும் இடத்தைக் கட்டவோ, ஸ்தாபிக்கவோ அனுமதி அளிக்கக் கூடாது. எந்த ஒரு இயந்திரத்தை அல்லது உற்பத்தி செய்யும் 3