உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


ஸ்டாம்பு தீர்வையின் மீது சர்சார்ஜ் கட்டணம்{கிராமப் பஞ்சாயத்துகள்; 57. பிரதேச வரி எவ்வளவு ? சட்டத்தின் 115 (1) பிரிவின்படி ஒவ்வொரு பஞ்சா யத்து அபிவிருத்தி வட்டாரத்திலும் ஒவ்வொரு பசலி யிலும் எந்த நிலத்தின் மீதும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியதான நிலவரியில் ரூபாய்க்கு 45 காசுகள் விகிதம் வரி விதிக்க வேண்டும். பிரிவு 115 (A)-ன் படி பிரதேச வt மூலம் கிடைக்கும் வருமானத்தை அபிவிருத்தி வட்டாரத் தில் இருக்கிற பஞ்சாயத்து யூனியனுக்கும் பஞ்சாயத்துகளுக் கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். வருமானத்தில், ஒன்பதில் நான்கு பங்குத் தொகையைப் பஞ்சாயத்து யூனியன் (கல்வி நிதிக்கு வரவு வைக்க வேண்டும். வருமானத்தில் ஒன்பதில் இரண்டு பங்குத் தொகையை நகரப் பஞ்சாயத்து நிதிக்கு வரவு வைக்க வேண்டும். வருமானத்தின் மீதியிலிருந்து பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலால் தீர்மானிக்கப்படுகிற ஒரு சதவிகிதம், கிராமப் பஞ்சாயத்துக்கு வரவு வைக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து யூனியனில் இருக்கிற எல்லாப் பஞ் சாயத்துக்களுக்கும் சேர்த்து கிடைக்கிற மொத்த தொகை யானது, பஞ்சாயத்து யூனியனில் இருக்கிற கிராம ஜனத் தொகையில் ஒவ்வொருவருக்கும் 20 காசுகள் வீதம் க்ணக் கிட்டு வரும் தொகைக்கு குறைவாக இருக்கக் கூடாது. வரு மானத்தில் மீதியைப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் நிதிக்கு வரவு வைக்க வேண்டும். பஞ்சாயத்து யூனியன்களுக்குச் சேரவேண்டிய பிரதேச வரியை பசவி வருஷத்தின் துவக்கத்திலேயே எதிர்பார்க்கப் படுகிற வசூலின் அடிப்படையில் முன்கூட்டியே கலெக்டர்கள் அனுமதி செய்கிருர்கள். இந்தத் தொகை, பஞ்சாயத்து யூனியனின் வரவில் சேர்க்கப்படுவதை கமிஷனர் கவனித்துக் கொள்வார். 58. பிரதேச வரி, சர்சார்ஜ் எவ்வளவு? பஞ்சாயத்து யூனியனில் இருக்கிற எந்த ஒரு நிலத்தின் பேரிலாவது, அரசாங்கத்திற்கு நிலவரி கொடுக்க வேண்டி யிருக்கிற ஒவ்வொரு நபரின் மீதும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனும் ஒரு பிரதேசவரி, சர் சார்ன்ஜ விதிக்கலாம். பஞ்சா