உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


யத்து அபிவிருத்தி வட்டாரத்தில் விதிக்கப்பட்டிருக்கிற பிரதேசவரியைத் தவிர இது பிரத்தியேகமானது. இது பொருத்தமானது என்று கருதப்படும் விகிதத்தில் இருக்கும். நிர்ணயிக்கப்படுகிற அதிகப்பட்சமான வரம்பை மீறியும் இந்த விகிதம் போகக் கூடாது. பிரதேச சர் சார்ஜ் விதிப்பதற்கு அரசாங்கம் எந்த ஒரு விகிதத்தையும் ஏற்படுத்தியிருக்க வில்லை. அத்தகைய விகிதம் ஏற்படுத்தப்படும் வரையில், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் 1371-ம் பசலியில் இருந்து நிலவரியின் மீது ரூபாய்க்கு 25 காசு கள் விகிதம் வரையில் பிரதேசவரி சர்சார்ஜ் விதிக்கலாம். இதற்கு அதிகமான விகிதப்படியும் பஞ்சாயத்து யூனியன் கவுன் சில்கள் விதிக்கலாம் என்று அரசாங்கம் அபிப்பிராயம் தெரிவித் துள்ளது ; ஆனால், அதிகமான விகிதப்படி சர் சார்ஜ் விதிப்பது பொதுமக்களுக்கு மிகுந்த பணக் கஷ்டத்தை உண்டு பண்ணும் என்று கலெக்டர் கருதுவாராளுல், விகிதத்தைக் குறைக்கும்படி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அவர் ஆலோசனை கூறலாம். எதிர்பார்க்கப்படுகிற வசூல் தொகையின் அடிப்படையில்: கலெக்டர்கள் பிரதேசவரி - சர் சார்ஜை முன் கூட்டியே அனுமதி செய்கிருர்கள். 59, நிலவரி மான்யம் எவ்வளவு ? சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலில் இருக்கும் மொத்த ஜனத்தொகையில், ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரூபாய் விகிதம் அரசாங்கம் கொடுக்கும் என்று சட்டத்தின் 118பிரிவு கூறுகின்றது. ராஜ்யத்தில் அந்த வருஷத்தில் தண்ணீர் தீர்வை உள்ளிட்டதான மொத்த நிலவரியிலிருந்து இது கொடுக்கப்படும். பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு வரவு வைக்கப்பட்ட அந்தப் பணம் அந்த வட்டாரத்தின் நிலவரி தீர்வை என்று கூறப்படும். ஒரு நபருக்கு ஒரு ரூபாய் என்ற சட்டபூர்வமான இந்த மான்யம் கல்விச் செலவில் முதற் பகுதி هنگاتنت):ایی நிலவரி மான்யத்தை அரசாங்கம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்கு கால தாமதமின்றி ஒரே தடவையில் 1961-ம் வருஷத்து ஜனத்தொகை எண்ணிக்கைகளை அடிப்படையாகக் காண்டு கணக்கிட்டு அரசாங்கம் கொடுக்கும். -