118
50. கல்வி மான்யம் எவ்வளவு ?
அரசாங்கம் ஆண்டுதோறும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் பிரதேச கல்விமான்யம் ஒன்றை அளிக்கும். அது பின் வருமாறு கணக்கிடப்படும் : பஞ்சா யத்து யூனியன் (கல்வி) நிதிக்குப் பற்று எழுதப்பட வேண் டியது என்று அரசாங்கம் ஒப்புக் கொண்ட செலவு தொகை யின் மொத்தம் கீழே கூறப்பட்டுள்ளபடி பல பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும் :-செலவில், 118-வது பிரிவில் கூறப் பட்டுள்ள நிலவரி தீர்வைக்குச் சமமான தொகை முதல்படி ஆகும்.
செலவில், மூல தனத்தைவிட அதிகப்படியாக இருப்பது, இரண்டாவது படி ஆகும். இது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தின் ஜனத் தொகையில் ஒவ்வொரு நபருக்கும் 250 காசுகளைவிட அதிகமாக இருக்கக்கூடாது. கொடுக்கப்பட வேண்டிய பிரதேச கல்விமான்யமானது இரண்டாவது படியின் ஒரு விகிதமாக இருக்கும்.
கீழே கண்டபடி வட்டாரத்தின் வகையை ஒத்து 50% விகிதத்திற்குக் குறையாமலும் 80% விகிதத்திற்கு மேற்படர் மலும் இருக்கும்.
(A) வகையைச் சேர்ந்த வட்டாரம் 50%
(B) வகையைச் சேர்ந்த வட்டாரம் 60%
(C) வகையைச் சேர்ந்த வட்டாரம் 70%
(D) வகையைச் சேர்ந்த வட்டாரம் 80%
பிரதேச கல்வி மான்யத்தை ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் கொடுப்பதற்கு விதிகளை வகுத்துள்ள் பகுதிகளே அமுல் நடத்தும் அதிகாரம், கூட்டு அபிவிருத்தி கமிஷனருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
51. பிரதேசவரி, சர் சார்ஜூக்கு இணையான
மான்யம் எவ்வளவு ?
அரசாங்கம் ஆண்டுதோறும் பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்கு பிரதேசவரி சர் சார்ஜூக்கு இணையான மான்ய்ம் ஒன்றைப் பஞ்சாயத்துயூனியன் கவுன்சிலுக்கு அளிக்க வேண் டும் என்பது சட்டத்தின் 129 பிரிவின் நோக்கம், பஞ்சாயத்து