120
வட்டாரத்தின் மதிப்பிடப்பட்டுள்ள ஜனத்தொகையில் ஒவ் வொருவருக்கும் 40 காசுகள் விகிதம் கணக்கிட்டு, அதன் ரோடுகளின் பராமரிப்புக்காக ஒதுக்கி செலவிட வேண்டும். பஞ்சாயத்து யூனியன்களின் தேவைகளையும் வருமானங்களே யும் கருத்தில் கொண்டு, இந்த விகிதத்தை ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை மறுபடியும் பரிசீலித்துத் திட்டம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும், ழான்யத் தொகையைக் கொடுக்கும்படி அனுமதி அளிக்கும் அதிகாரம், கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மான்யம் ஒவ் வொரு வருஷத்திலும் இரண்டு ஆறுமாதத் தவணைகளில் கொடுக்கப்படும். அதாவது ஏப்ரலில் முதல் தவணையும், அக் டோபரில் இரண்டாவது தவணையும் வரும்.
இந்த மான்யம், பஞ்சாயத்து யூனியனின், ரோடுகளுக் காகச் செலவிடவோ அல்லது அவற்றைப் பராமரிக்கும் செலவுக்கென்ருே ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து யூனியன் ரோடுகளில் முதலாவதாகப் பழுது பார்க்கத் தேவையாக இருக்கிற ரோடுகள், பழுதுகளின் விவரங்கள், பழுது பார்ப்பு தற்கு ஆகக்கூடிய உத்தேசமான செலவு ஆகிய விஷயங்களை நிதி வருஷம் ஆரம்பித்த உடனேயே, தீர்மானம் செய்து விட வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு பராமரிப்புத் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த வேலை கள் சம்பந்தமான எஸ்டி மேட்டுகளைப் பஞ்சாயத்து யூனிய னின் தொழில்துறை அலுவலர்கள் தயாரிக்க வேண்டும். அவற்றை தகுதி வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு தொழில் அம்சத்தில் சரியானவை என்பதற்கு அனுமதி பெறவேண்டும் . இந்த எஸ்டிமேட்டுகளைத் தகுதி யுள்ள அதிகாரிகள் நிர்வாக அம்சத்தில் சரியானவை என்று அனுமதி செய்ய வேண்டும்.
64. கிராம வீட்டு வரிக்கு இனை மான்யம் எவ்வ
ளவு ?
கிராமப் பஞ்சாயத்து வகுவிக்கிற வீட்டு வரியில், ஒவ் வொரு ரூபாய்க்கும் சமமான ஒரு தொகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும், இதற்கு கிராம வீட்டுவரிக்கு இணை மான்யம் என்று பெயர். ஒவ்வொரு அரை வருஷத்திலும் வசூலாகிற தொகையின் மீது கணக்கிட்டு, இந்த மான்யத் தைக் கலெக்டர் இரண்டு அரை வருஷத்துத் தவனேகளில்