உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


அளிப்பார், இந்த மான்யத்தை வசூலித்துப் பஞ்சாயத்து களுக்கு உடனே கொடுக்க வேண்டியது பஞ்சாயத்து யூனியன் கமிஷனரின் பொறுப்பாகும். கிராமப் பஞ்சாயத்து தன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி, வீட்டுவரி விதிக்கத் துரண்டு வதுதான் இந்த மான்யத்தின் நோக்கம். இந்த முறையில் கிராமப் பஞ்சாயத்தின் நிதி வசதிகள் பெருகும். 65. கிராமப் பணிகளுக்கான மான்யம் எவ்வளவு? பல்வேறு திட்டங்களின்படி எடுத்துக் கொள்ளப்படுகிற கிராம வேலைகளை கிராமப் பணிகள் திட்டம் என்று அழைக்கப் படும் ஒரே திட்டமாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக் கும் ஒரு கிராமப் பணிகள் மான்யம் உண்டு; இது பள்ளிக் கூடக் கட்டிடங்களே அமைக்கும் வேலையை மட்டும் கொண் டது. குடிதண்ணிரும், ஜலசப்ளேயும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தனிப்பட்ட கிராமப் பணிகள் மான்யம் ஒன்று உண்டு. 66. பள்ளிக்கூட உணவு மான்யம் எவ்வளவு? பள்ளிக்கூட உணவுத் திட்டத்தின்படி கொடுக்கப்படுகிற மான்யத்தை, பிரதேச கமிட்டிகளுக்குப் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் கொடுப்பார். இவ்விதம் கொடுப்பதற்கு ஒரு குறிப் பிடப்பட்ட பள்ளிக்கூட உணவு மான்யம் கொடுத்து ஈடு செய்யப்படும். பஞ்சாயத்து அபிவிருத்தியின் திட்டமான பட்ஜெட்டில் இதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மான்யம் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை விகிதம் அளிக்கப்படும். : 57. முதியோர் எழுத்தறிவுப் பள்ளிக்கூடங்களுக் கான மான்யம் எவ்வளவு ? பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடங்களில் வேலைபார்க்கிற ஆசிரியர்களே முதியோர் எழுத்தறிவுப் பள்ளிக்கூடங்களிலும் வேலை செய்வார்கள். இந்தப் பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் பொறுப்பில் இருக்கும். பஞ்சாயத்து ஆனியன் கவுன்சில்கள், விதிகளின்படி இந்த ஆசிரியர்களுக்கு உரிய மான்யத்தைக் கொடுக்கும்.