பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


தோறும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் மான்யம் கொடுக்கும். இந்தி மகப்பேறு விடுதிகளின் எண்ணிக்கை மேலே கூறிய அளவுக்கு அதிகமாகப் போகக் கூடாது. 76. கதர் திட்டத்துக்கு மான்யமும் கடனும் எவ்வளவு ? இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பஞ்சாயத்து யூனிய னும், தன்னுடைய எல்லைக்குள் இருக்கிற பஞ்சாயத்துகளில், ராஜ்யத்தின் கிராமப் பகுதிகளில், கதர் அபிவிருத்தித் திட்டத்தை, அமுல் நடத்தும் சக்தி வாய்ந்த பஞ்சாயத்து களைப் பொறுக்கி எடுக்கும். பஞ்சாயத்து யூனியன் இந்தத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர தீர்மானிக்கிற ஒன் வொரு வருஷமும் கிடைக்கிற உதவியைக் கீழே கூறப்பட்டிருக் கிற விவரங்கள் காட்டுகின்றன. மான்யம் : (1) ஒன்றுக்கு ரூ. 3-50 வீதம் 20 சர்க்காக் களின் விலையின் மீது உதவித் தொகை ரூ. 70-00; (2) புதிதாக நூல் நூற்பவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கு ஒருவருக்கு ரூ. 1 மதிப்புள்ள பஞ்சு வீதம் இலவசமாகக் கொடுப்பதற்கு ரூ. 20-00 ; (3) பஞ்சாயத்து யூனியனுக்கு, இரண்டாவது கிரேடு அஸிஸ்டெண்டு ஒருவரை நியமிக்க மான்யத்தின் முழுத் தொகை. ரூ 1550-00. கடன் : நடை முறைச் செலவுகளுக்கான முதலுக்காகக் கட்ன்-பஞ்சு, பட்டைகளை வாங்கிச் சேமித்து வைத்தல், நூலும் கதரும் விலைக்கு வாங்குதல். ரூ.350-00 பஞ்சாயத்து யூனியனுக்குள்ள பொறுப்பு கதர் உற்பத்தி யைப் பெருக்குவது மாத்திரம் அன்று ஒவ்வொரு வட்டாரத்தி லும் உற்பத்தி செய்யப்பட்ட கதரை அந்தந்த வட்டாரத் லேயே உபயோகப்படுத்துவதற்கு வழி செய்வதும் ஆகும். 77. கிராமக் கைத்தொழில்கள் திட்டத்துக்கு மான் யங்களும் கடன்களும் எவ்வளவு ? கிராமக் கைத்தொழில்கள் சம்பந்தமான அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம், பஞ்சாயத்து யூனியன்களிடம் ஒப்படைத்திருக்கிறது. தேவையான இடங்களில் எல்லாம் நடைமுறைச் செலவு, முதலுக்கான கடன்கள், பஞ்சாயத்து யூனியனுக்கு கிராமக் கைத்தொழில்களே ஏற்படுத்தும் பொருட்டுக் கொடுக்கப்படும். கிராமக் கைத்தொழில்